தேவையான பொருட்கள்
வேப்பம் பூ - சிறிதளவு பச்சைமிளகாய் - 3 இஞ்சி - 1/2 இன்ச் துண்டு சீரகம் - 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 1/2 தேக்கரண்டி தயிர் - 1/2 கிண்ணம் கடுகு - 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை - 1 ஆர்க்கு கொத்தமல்லி - சிறிதளவு உப்பு - தேவயான அளவு
செய்முறை
வேப்பம் பூ, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் எண்ணெயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்ததை புளித்த தயிரில் கலக்கவும். அத்துடன் உப்பு சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
தாளித்ததை வேப்பம்பூ பச்சை மிளகாய், இஞ்சி , சீரகம் விழுது கலந்த தயிரில் சேர்க்கவும். கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும். |