தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 3 மேஜைக்கரண்டி வேப்பம் பூ - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 3 புளி - பெரிய நெல்லிக்காய் அளவு உப்பு - தேவையான அளவு உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி
செய்முறை
வேப்பம் பூவை வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கி வைத்துக்கொள்ளவும்.
துவரம் பருப்பை வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ளவும். புளியை தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து உப்பு, புளி தண்ணீர், பருப்புக் கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதி வந்தவுடன் வறுத்த வேப்பம்பூ பொடியை தூவி விடவும். கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும். |