தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கிண்ணம் பாசிப்பருப்பு - 1 கிண்ணம் மிளகு - 10 கிராம் சீரகம் - 5 கிராம் முந்திரிப்பருப்பு - 12 இஞ்சி - சிறிய துண்டு உப்பு - தேவையான அளவு நெய் - 100 கிராம் கறிவேப்பிலை - 2 ஆர்க்கு பெருங்காயம் - சிறு துண்டு
செய்முறை
அரிசியை நன்கு கழுவி பத்து நிமிடம் ஊறவிடவும்.
பாசிப்பருப்பையும் நன்கு கழுவி பத்து நிமிடம் ஊறவிடவும்.
இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
முந்திரிப்பருப்பை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
மிளகு, சீரகத்தை மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக் கொள்ளவும். சுத்தம் செய்த அரிசியுடன் தண்ணீர், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு குழையும் வரை வேகவிடவும்.
அரிசி குழைந்தவுடன் அத்துடன் பாசிப்பருப்பையும் சேர்த்து குழைய வேகவிடவும். மிளகு, சீரகம் , இஞ்சி, கறிவேப்பிலையை நெய்யில் வதக்கி வெந்த பொங்கலில் சேர்த்து கிளறவும்.
கடைசியாக அடுப்பிலிருந்து பொங்கலை இறக்கும் முன் நெய் சேர்த்து கிளறி விட்டுப் பரிமாறவும். |