பாசிப்பருப்பு பாயாசம்
தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 1 கிண்ணம்
வெல்லம் - 1 கிண்ணம்
ஏலக்காய் - 3
முந்திரிப் பருப்பு - 10
தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம்
நெய் - அரை கிண்ணம்

செய்முறை

பருப்பை தண்ணீர் சேர்த்து குழைய வேகவிடவும்.

பருப்பு நன்கு வெந்தவுடன் வெல்லத்தை சேர்க்கவும்.

கொதி வந்தவுடன் ஏலக்காயை பொடி செய்து சேர்க்கவும்.

நெய்யில் வறுத்த முந்திரி பருப்பை அத்துடன் சேர்க்கவும்.

தேங்காய் துருவலையும் சேர்த்து கிளறவும்.

மீதி இருக்கும் நெய்யை அத்துடன் சேர்த்து கிளறி பின்பு பரிமாறவும்.

© TamilOnline.com