வாழைப்பூ வடை
தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - 100 கிராம்
வாழைப்பூ - 1
வெங்காயம் - 2 பெரியது
காய்ந்த மிளகாய் - 6
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
சோம்பு - 1/2 மேஜைக்கரண்டி
சீரகம் - 1/2 மேஜைக்கரண்டி
எண்ணெய் - 200 கிராம்
ஜவ்வரிசி (ஊற வைத்தது) - 10 கிராம்
தேங்காய்த்துருவல் - 1/2 கிண்ணம்

செய்முறை

துவரம் பருப்பு, கடலைப்பருப்புகளை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற விடவும்.

வாழைப்பூவை சுத்தம் செய்து மிக்ஸியில் ஒரு முறை ஓட விட்டு வைக்கவும்.

சுத்தம் செய்த பின் தண்ணீரில் போட்டு அலசி எடுத்தால் துவர்ப்பு போய்விடும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

நன்கு ஊறிய துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, ஜவ்வரிசியுடன் சோம்பு, சீரகம், மிளகாய், போட்டு நறநறவென்று அரைத்துக் கொள்ளவும்.

அத்துடன் கடைசியாக வாழைப் பூவை சேர்த்து அரைக்கவும்.

அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய்த்துருவல், உப்பு, மஞ்சள் தூள், சோடா உப்பு சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை சூடாக்கி வடைகளை தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

© TamilOnline.com