புத்தாண்டு சிறப்பு மாயாபஜார்
வலைவாசிகளுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். இனிய, உண்மையிலேயே இனிப்புடன் வரும் கைப்பக்குவம் இது. நம்முடைய பாட்டியோ, அம்மாவோ செய்து கொடுத்த ஏதாவது ஒரு பட்சணம், இனிப்பு என்று எல்லோருக்கும் அதன் சுவை நாவிலும், அவர்களின் நினைவு மனதிலும் கொஞ்சம் இருக்கும், இனிக்கும், இருந்தாலும் பரபரப்பான நகரவாழ்க்கையில் மறந்து போன பலகாரங்கள் நிறைய உண்டு. அதை நினைவுறுத்த, இப்போது மறுபடியும் கொஞ்சம் சுவைத்துப் பார்க்கத் தருகிறோம்.

கல்கண்டு வடை

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு - 200 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
கல்கண்டு - 200 கிராம்

செய்முறை

உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் தண்ணீரில் அரை மணி நேரம் ஊற விடவும்.

நன்கு ஊறிய பருப்பை தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.

அது நன்கு மசிந்த பின் அத்துடன் கல்கண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை சூடாக்கி உளுந்து வடை போல மாவை தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

© TamilOnline.com