தமிழ் சினிமா ஒவ்வொரு அடியையும் அளந்து அளந்து வைத்துக் கொண்டிருக்கிறது. கீழ்க்காணும் பட்டியலைப் பார்த்தால் தமிழ் சினிமா ஏன் திகிலில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
பிற மொழிகளில் வெற்றி பெற்றதனால் தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட- செய்யப்படுகிற- சமீபத்திய படங்கள்:
மலையாளம் -சீனு - பரதம் - கார்த்திக் நடித்தது.
தெலுங்கு - பிரியமானவளே- பவித்ரபந்தம்- விஜய் நடித்தது.
மலையாளம்- பிரியாத வரம் வேண்டும்- நிறம்- பிரசாந்த் நடிக்கிறார்.
மலையாளம்- பிரண்ட்ஸ்- பிரண்ட்ஸ்- விஜய் நடிக்கிறார்.
தெலுங்கு- (தமிழில் பெயரிடப்படவில்லை) -தம்புடு- விஜய் நடிக்கிறார்.
அடுத்து ரஜினி தயாரிக்கத் திட்டமிட்டிருக்கும் படம், தெலுங்கில் வெளியாக இருக்கும் 'ராயல சீம ராமண்ண சௌத்ரி'.
இவை தவிர, ஆர்.கே. செல்வமணி தயாரிப்பில் 'பொட்டு அம்மன்', ராம.நாராயணன் தயாரிப்பில் ஒரு அம்மன் படம், பிரபு நடிக்கும் 'தாலி காத்த வேலியம்மன்' உள்ளிட்ட அம்மன் அருள் பெற்ற படங்கள் உருவாகி வருகின்றன.
இன்னொரு பக்கம் தமிழில் வெற்றி பெற்ற 'முதல்வன்' படத்தை இந்தியில் இயக்கி வருகிறார் ஷங்கர்.
அப்படியானால் அசல் தமிழ்ப்படங்களின் கதி ?
ரொம்பத்தான் பயந்து போயிருக்காங்க! |