இளம் கதாநாயகன் வரிசையில் விஷால்!
இன்று வேகமாக முன்னேறி வரும் இளம் கதாநாயகன் விஷாலுக்கு இது நல்லநேரம். விஷால் நடிக்க வருவதற்கு முன்பு அவரது சகோதரர் அஜய் முதலில் சினிமாவில் நடிக்க வந்தார். இரண்டு, மூன்று படங்களுக்கு மேல் அவரால் சினிமாவில் நீடிக்கமுடியவில்லை. தந்தையின் வியாபாரத்தை பார்க்க போய்விட்டார். அதிர்ஷ்ட காற்று தம்பி விஷால் மேல் பட, சினிமாவில் நடிக்க வாய்ப்பு இவரைத் தேடிவந்தது. 'செல்லமே', 'சண்டைகோழி'தொடர் வெற்றிகள் விஷாலை இளம் கதாநாயகர்கள் வரிசையில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

நிறைய தயாரிப்பாளர்கள் இப்போது விஷாலை தேடி வருகிறார்கள். இயக்குநர் ஹரியின் 'தாமிரபரணி'யை தொடர்ந்து தற்போது 'சிவப்பதிகாரம்' படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வரா இந்த இளம் கதாநாயகன்?

கேடிஸ்ரீ

© TamilOnline.com