கண்மூடி வாங்குகிறேன் கால்களற்ற காற்றை
நதியின் கல்லெறி சுழிப்புகளாய் ஞாபகங்களைப் பின்னோக்கி மீட்ட
மெல்ல மெல்ல நிகழ் மறந்து பழைய என்னைத் தேடி இறங்குகிறேன் என்னுள்
கொள்ளளவுக்கு மீறி காமம் தேக்கி நொடியின் பல கூறிலும் உனைக்கண்ட நான்
இப்போது நம் காதல் உள்ளீடற்ற வெங்காய உரிதல்களாய்
பழைய என்னைப் பார்த்து நிகழ் நானே நகுகிறேன்
இரவி |