பிப்ரவரி 2001 : வாசகர் கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,

தென்றல் மிகவும், ஜனரஞ்சகமாகவும், அதே சமயம், பயனுள்ள செய்திகளைத் தாங்கி வருவது கண்டு, மகிழ்ச்சி. நம்முள் ஒருவரே இம்முயற்சியைத் தொடங்கி இருப்பது குறித்து, மிகவும் சந்தோஷமாகவும், பெருமையாகவும் உள்ளது. உங்கள் குழுவுக்கு, என்னுடைய வாழ்த்துக்கள்

கீதா பாஸ்கர், ஸான்பிரான்ஸிஸ்கோ

*****


நான் பாண்டிச்சேரியில், பிரெஞ்சு அரசாங்கத்தால், நடத்தப்படுகிற ஒரு கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர். தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும், நிறைய கதைகள், கவிதைகள மொழி பெயர்த்துள்ளேன். உங்கள் தென்றல் இதழில், பல சுவாரசியமான கட்டுரைகளப் படித்தேன். உங்கள் முயற்சிக்கு, என்னுடைய பாராட்டினையும், ஊக்கத்தினையும், தெரிவித்துக் கொள்கிறேன்.

மதனகல்யாணி, ஸான்பிரான்ஸிஸ்கோ

*****


அன்புள்ள ஆசிரியருக்கு,

நேற்று, தென்றல் மாத இதழை ஒரு ரெஸ்டாரண்டிலிருந்து, எடுத்துக் கொண்டேன். உங்கள் சீரிய முயற்சிக்கு பாராட்டுக்கள். எல்லா கட்டுரைகளும், கவிதைகளும், செய்தித் துணுக்குகளும், கதைகளும், மிகவும் நன்றாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மணிராம், ·ப்ரீமாண்ட்

*****

பாராட்டுக்கள். மிகவும் நன்றக எழுதப்பட்டத் தலையங்கம். இந்த முயற்சி, முழுமையான வெற்றியாக வாழ்த்துக்கள்.

சந்திரசேகர், நியூ ஜெர்ஸி
*****


நல்ல தொடக்கம். அற்புதமான கதை, கட்டுரைத்தேர்வுகள், அற்புதமான 'கெட்டப்'.. வாசகர்களின் அபிப்ராயத்துக்கு, மதிப்பளித்து, தமிழை எளிமையாக, கொடுத்திருக்கும் முயற்சி, உங்கள் குழுவின் உழைப்பு தெரிகிறது. அமெரிக்கத்தேர்தல் கற்பனை, நல்ல நகைச்சுவையுடன் இருந்தது. மிமி கதை, மிகவும் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

பாரதி பலராமன், க்யூபர்டினோ.
*****


தமிழில் பத்திரிக்கைக் கொண்டு வர வேண்டு மென்ற ஆர்வம், துணிச்சல் இவற்றைப் பாராட்டுகிறேன். உங்கள் இதழின் எழுத்தாளர்கள், நல்ல தரத்தோடு எழுதுகிறார்கள். மிமி கதை, சுஜாதா பாணியை ஒட்டி இருந்தாலும், படிப்பதற்கு, மிகவும் சுவாரசியம். விருதி விஷயம் - கதையா, கட்டுரையா.. எதுவானாலும், நல்ல நகைச்சுவையுடன் எழுதப்பட்டுள்ளது.. எழுப்பப்பட்டுள்ள கேள்வியும் நியாயமானதே

மணி, ஸேன் ஹோஸே
*****


இந்த இதழ்த் தென்றல் கண்டேன்!
இனிய தமிழ்ச் சுவையைக் கொண்டேன்!
சென்ற இதழ்த் தென்றல் - அதனைக்
கண்களிலே காணவும் இல்லை! - நீர்
ஒன்றதையே தயவுடன் அன்பாய் - உடன்
அஞ்சலிலே அனுப்பல் ஆமோ!!


ராம் ·ப்ரீமாண்ட்
*****


நல்ல தமிழ், சராசரிக்கு மேற்பட்ட மனிதர்களை மட்டுமே ஈர்க்கக்கூடிய கட்டுரைகள், இலவச வெளியீடு.. ஏதோ தரும காரியம் செய்யப் புறப்பட்டுவிட்டாற் போல் தெரிகிறதே..! சார், கொஞ்சம் கீழே இறங்கி வாருங்கள் சார்..! உங்கள் பத்திரிக்கை நல்லமுறையில், நெடுங்காலத்துக்கு வரவேண்டும் என்னும் அக்கறையில் சொல்லுகிறேன்..! இருந்தாலும், மிகவும் நல்ல, தரமான இதழ்...! அதனால்தான் கவலையாய் இருக்கிறது.

கணேஷ், டிட்ராய்ட்
*****


(ஆ-ர்: கவலை வேண்டாம் கணேஷ். போகப்போகத் தெரியும், இப்பூவின் வாசம் புரியும் என்னும் பாடல் நினவிருக்கிறதா..? உங்கள் மேலான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி. உங்கள் அக்கறையைக் கட்டாயம் கருத்தில் கொண்டு செயல்படுவோம்.)
*****


சுகமானதொரு வசந்தமாய்
புத்துணர்ச்சியினை ஊட்டி
வருடிச் சென்ற இந்த இன்பத் தென்றலின்
ஸ்பரிசம் என்னை தொடர்ந்து தாலாட்ட
எல்லாம் வல்ல அந்த இறைவனை
வணங்கி வேண்டுகிறேன்


ஸ்ரீகோண்டு, ப்ரீமாண்ட், கலிபோர்னியா
*****


தென்றல் இரண்டாவது மாத இதழ் இன்று கிடைக்கப் பெற்றோம். முகப்புப் பக்கம், மிகவும் கண்ணைக் கவரும் விதத்திலே வடிவமைக்கப் பட்டுள்ளது. அப்துல் ரகுமானின் கவிதை மிகவும் நன்றாக இருந்தது. சினிமா, இசை சம்பந்தப்பட்ட பக்கங்களை அதிகமாக்கினால் நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கான புதிர்கள், பொது அறிவுக் கேள்வி-பதில்கள் பகுதி பயனுள்ளதாக இருக்கும். சமயம், மாதப் பண்டிகைகள், இந்தியப் பிரபலங்கள், இந்தியக் கோவில்களைப் பற்றிச் செய்திக் கட்டுரைகள் மிகவும் விரும்பிப் படிக்கப்படும்.

மைதிலி
*****


தென்றல் இதழ் மிகவும், அழகாகவும், பயனுள்ள வகையிலும் வெளி வந்திருப்பது கண்டு மகிழ்ந்தோம்.

இதோ என்னுடைய மாத சந்தா! தமிழ் நாடு, மற்றும் இந்திய அளவில்லான மாதாந்திர செய்தித்தொகுப்புகளை வெளியிடலாமே!

உங்கள் முயற்சியின் ஆதரவாளர்,
கண்ணப்பன்
*****


உங்கள் மாத இதழின் ஜனவரிமாதப் பதிப்பு கிடைக்கப்பெற்றேன். நல்ல முயற்சி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்! நாங்கள், ந்யூஜெர்ஸி நகரில் நடக்கவிருக்கும் பொங்கல் விழாவில், இவ்விதழை அறிமுகப்படுத்தி, சந்தா படிவத்தையும் தரவிருக்கிறோம். இவ்விதழுக்கு, கதை, கட்டுரை, கவிதைகள் அனுப்புவதற்கு அடிப்படைத் தேவைகள் என்ன..?

க்ரிஷ் வெங்கட், ந்யூ ஜெர்ஸி
*****


(ஆ-ர்: உங்கள் கற்பனையும், எழுதும் முயற்சியும்தான் தேவை. தவிர முரசு அல்லது சுவடி தொகுப்பான்களின் மூலம் (Document Editors) மின்வடிவத்திலே அனுப்பினால், மிகவும் எளிதாயிருக்கும்.)

*****


நான் இந்தியப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவன் (நான் ஒரு மலேசிய இந்தியன்) என்பதில் பெருமை கொள்கிறேன். பிறந்த நாட்டை விட்டு, இவ்வளவு தொலைவில் வந்து, தமிழ் மொழியின் சிறப்பை தூக்கி நிறுத்தும் உங்கள் எண்ணமும், முயற்சியும் பாராட்டுக்குரியன. உங்களது, இம்முயற்சி, தங்களது, மூதாதையரையும், முதிர்ந்த கலாச்சாரத்தையும் அடையாளம் காணும் தாகம் உள்ள ஒரு சில தமிழர்களுக்காகவாவது தொடரவேண்டும்.

சாம்பசிவம் சின்னைய்யா
*****


உங்கள் முயற்சி, மிகவும் சிறப்பான முயற்சி. வண்ணமயமாகவும், அழகான முறையிலும் அச்சடிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.

திருமதி. சிவசுப்பிரமணியம்
*****

© TamilOnline.com