க்யூபர்ட்டினோ, கலி·போர்னியாவிலிருந்து, தமிழன்பர் ஒருவர் நமது கேள்வி-பதில் பகுதியை தொடங்கிவைக்கும், புண்ணியத்தை கட்டிக்கொள்கிறார்.
இவரது கேள்வி, பல துணைக்கேள்விகளை உள்ளடக்கியிருப்பதால், இந்த ஒரு கேள்வி மட்டுமே, இந்த மாத இதழுக்குப் போதுமானது.
எனக்கு, 'தில்லு முல்லு' படத்தில் ரஜினிகாந்த், செளக்கார் ஜானகியிடம் சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது. ஓரு நாடகத்தில் நடிப்பதற்காக, செளக்காரை, ரஜினி கூப்பிடுவார். அதற்கு, அவர், எவ்வளவு ஜனங்கள் இருப்பார்கள் என்று கேட்க, ரஜினி சொல்லும் பதில், "ஜனங்கள் இல்லை மேடம்!, ஜனம்! ஒரே ஒருவர்தான்" என்று சொல்லுவார்.
அதுபோல, கடிதங்கள் அல்ல - வந்துள்ள ஒரே வாசகர் கடிதத்துக்கு, பதிலளிக்காமல் விடுவோமா..?
தமிழன்பர், க்யுபர்ட்டினோ.
கேள்வி பதில் பகுதிக்கு, எத்தகைய கேள்விகள் கேட்கக்கூடும்..?
சினிமா சம்பந்தமாகவா? அரசியலா? புராணக்கதைகள் பற்றியா..? அமொ¢க்க சா¢த்திரம் பற்றியா? தமிழ் கூறும் நல்லுலகம் பற்றியா? இயல், இசை நாடகம் பற்றியா? ஜோஸ்யம், கைரேகைப் பற்றியா..? கம்ப்யூட்டர், இண்டெர்-நெட், ஸா·ப்ட்வேர், H1-B விசா பற்றியா?
இந்திய, அமரிக்க, தமிழ், ஆங்கிலப் பத்திரிக்கைகள் பற்றியா? மருத்துவம் பற்றியா? படிப்பு, முன்னேற்றம், வியாபாரம் பற்றியா? உலக விளையாட்டுக்கள் பற்றியா? தன்னலமற்ற சமூகச் சேவைகளைப் பற்றியா? மனத்தளவிலா, பணத்தளவிலா, உடலளவிலா, உணர்வளவிலா...? எவற்றைப் பற்றியெல்லாம் கேட்கலாம்..?
தெ.ம: சிறிது, மூச்சு வாங்கிக் கொள்கிறேன். உங்கள் தெய்வமச்சான் இந்த ஸ்பெஷல் கேள்விக்கு பதில் அளிக்கும்முன், உங்களுக்கு ஒரு கேள்வி!. நீங்கள் திருவிளையாடல் படத்தில் வரும் 'தருமி'க்கு, சொந்தமா...? இத்தனைக் கேள்விகளை அடுக்கியிருக்கிறீர்கள்..! வாசகர்கள் எதைப்பற்றியும் கேட்கலாம், சபை நடுவே கேட்க தகுதி வாய்ந்ததாயிருந்தால்!. தெய்வமச்சான் என்னும் என் பெயரில் தெய்வம் ஒட்டிக்கொண்டிருந்தாலும், எனக்கு தெரியாத விஷயங்கள் பல உண்டு..! தெரிந்த வரையில் நிச்சயமாகப் பதில் கூறுவேன். தெரியாதவற்றைப் பற்றி, தெரிந்து கொண்டு, பதில் கூற முயற்சிப்பேன். கேள்வியினைப் பொறுத்து, பதில்கள்...! கிண்டலுக்குக் கிண்டல், நெத்தியடிக் கேள்விகளுக்கு, 'நச்', என கட்டாயம், பல விதங்களில் பதில்கள் வரும்..! எல்லாவிதக் கேள்விகளும் எனக்கு ஓ.கே தான்..! நான் ரெடி.!. நீங்க ரெடியா..? என்ன? ஒரே, சரத்குமார் நெடியா..? |