பிப்ரவரி 2001: குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக

1. தலையின்றித் தொந்தரவு செய் வெளியே பசி சாதமாகும்
4. ஆண்டியிருக்கும் கனிச்சுரம்
6. அக்காலத்திய மஞ்சள் பாடகி ?
7. சொந்தக் கடவுள் அரவு வாலால் பிற நாட்டுதவியை நம்பா நிலை
8. புதல்வன் புதல்வன் புதல்வன் தலையிடம் ஏகப்பட்ட வாஞ்சை
9. தினாவுக்குக் குடி மாறிய வழிகாட்டி
12. ஆமாம் சாமி என்ற ராகத்தில் அமைந்ததோ?
14. மக்களாட்சியில் குடிகள் அளிக்கும் உறுதிமொழி
16. நோயில்லா இன்பம்
17. ஒரே வீட்டில் வாழ்வோர் ராசியில் கடைசி வீடு

நெடுக்காக

1. அரும்பத விளக்கத்தில் அரசியல்வாதி நாடுவது
2. தெரியாத்தனமாய்ச் சாப்பிட்டு விட்டு எதிர்க்கட்சிக்குப் போரிட்ட மாமன்
3. கீழே கொட்ட -றுதியில் சென்னை சேர எண்ணம்
4. ஆள்பவனின் உலா!
5. ஞாபகத்தில் இருப்பவை
8. பிரிதலைப் பேசு, கலங்கிச் சாய் கற்பனையில் பயமூட்டும்
10. கம்பி வார ஆட்டிப் பெருக்கு
11. மூலை அதிவேகமாக்கு
13. காலிலே அடி
15. குள்ளம் குறையக் குட்டை

வாஞ்சிநாதன்
vanchi@chennaionline.com

பிப்ரவரி 2001: குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

குறுக்காக:1. பச்சரிசி 4. பழநி 6. விறலி 7. தன்னிறைவு 8. பேரன்பு 9. நபிகள் 12. பின்பாட்டு 14. வாக்கு 16. சுகம் 17. குடும்பம்
நெடுக்காக:1. பதவி 2. சல்லியன் 3. சிந்தனை 4. பவனி 5. நினைவுகள் 8. பேய் பிசாசு 10. பிரவாகம் 11. முடுக்கு 13. பாதம் 15. குளம்

© TamilOnline.com