தேவையான பொருள்கள்
பிரட் சிறிய பாக்கெட் - 1 உருளைக்கிழங்கு - 100 கிராம் பச்சை மிளகாய் - 3 இஞ்சி - 1 சிறு துண்டு தக்காளி - 2 தேங்காய்த்துருவல் - 2 மேசைக்கரண்டி முந்திரிப்பருப்பு - 8 உப்பு - தேவையான அளவு கடுகு - 1 தேக்கரண்டி உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி நெய் - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
செய்முறை
ரொட்டியின் ஓரங்களைப் பிய்த்து எடுத்து விட்டு, வெண்மையாக உள்ள பகுதிகளை மட்டும் உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோலை நீக்கிவிட்டு, உதிர்த்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், இஞ்சி, உப்பு, தக்காளிப் பழம் இவற்றை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, நெய் விட்டுக் காய்ந்ததும் உளுந்தம் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு தாளிதம் செய்து, ரொட்டித்தூளையும், உருளைக் கிழங்கையும் அதில் போட்டுக் கிளறி விட்டு, அரைத்து வைத்துள்ள விழுதை சிறிது தண்ணீரில் கரைத்து, மேற்படி உப்புமாவில் தெளித்து, ஈரப்பசை இல்லாமல் கிளறி விட்டு இறக்கிக் கொள்ளவும்.
முந்திரிப் பருப்பை வறுத்து, உடைத்து உப்புமாவில் போட்டுக் கிளறி இறக்கவும்.
இதற்கு சர்க்கரை அல்லது ஜாம் தொட்டுச் சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
நளாயினி |