டாங்கர் பச்சடி
தேவையான பொருட்கள்

வெள்ளை உளுந்தம்பருப்பு - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
கெட்டியான தயிர் - 200 கிராம்
பச்சைமிளகாய் - 2

செய்முறை

வெள்ளை உளுந்தம்பருப்பை வாணலியில் போட்டுச் சிவக்க வறுத்துக் கொள்ளவும். மிதமான தீயில் வறுக்கவும்.

பச்சை மிளகாயையும், உப்பையும் சேர்த்து விழுதாக அரைத்துத் தயிரில் கலந்து கொள்ளவும்.

உளுந்தம்பருப்பை மிக்ஸியில் போட்டுப் பொடியாக்கிக் கொள்ளவும்.

உளுந்தம்பருப்புப் பொடியையும் தயிரில் போட்டுக் கலந்து கொண்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டிக் கலந்து வைக்கவும்.

கதம்ப சாதத்துடன் தொட்டுக் கொள்ள புளிப்பும், காரமுமான பச்சடி தயார்.

நளாயினி

© TamilOnline.com