புது தில்லியின் டிசம்பர் மாதக் குளிரை இன்னும் ஒரு படத்திலும் சரியாகப் படம் பிடிக்கவில்லை என்பது கமல்ஹாசனின் நீண்ட நாள் வருத்தம். இப்போது 'ஆளவந்தான்' படத்தை டிசம்பர் குளிருக்குப் பயன்படுத்தி வருகிறார் கமல். டிசம்பர், ஜனவரி இரண்டு மாதங்களும் அங்கு தொடர்ச்சியான படப்பிடிப்பு. பிப்ரவரி மாதம்தான் படக்குழுவினர் சென்னை திரும்புகிறார்கள்.
இளைஞர் - வயதானவர் (இந்தியன்), உயரமானவர் - குள்ளமானவர் (அப்பு), வீரன் - கோழை (கல்யாணராமன்) போன்ற பல இரட்டை வேடப் படங்களில் வெளுத்துக் கட்டிய கமல், இதில் அரக்கத்தனமான உடல்வாகு - சாதாரண உடல்வாகு என வித்தியாசம் காட்டி நடித்து வருகிறார்.
தேனீ |