தேவையான பொருள்கள்
அவல் - 1 கிலோ சர்க்கரை - 750 கிராம் முந்திரிப்பருப்பு- 10 ஏலக்காய் - 5 தேங்காய் - 1 மூடி நெய் - 2 கரண்டி
செய்முறை
அவலைத் தூசு போக நன்றாகச் சுத்தம் செய்து கொள்ளவும்.
சுத்தம் செய்த அவலைப் பொன் நிறமாக வறுத்துக் கொண்டு, அதை மிக்ஸியில் போட்டுக் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த அவல் மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டுப் பிசைந்து, இட்லி தட்டில் வைத்து வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
சர்க்கரையைப் பாகு காய்ச்சி வடிகட்டி வைக்கவும். ஏலக்காய்களைப் பொடி செய்து சர்க்கரைப்பாகில் கலந்து கொள்ளவும்.
தேங்காயைத் துருவி வாணலியில் சிறிதளவு நெய் விட்டு வறுத்து எடுத்துக் கொண்டு, முந்திரிப்பருப்பையும் வறுத்துக் கொள்ளவும்.
வேக வைத்து எடுத்த அவலில் தேங்காய்த்துருவல், வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்து அத்துடன் சர்க்கரைப்பாகைக் கொட்டிக் கிளறி, இரண்டு கரண்டி நெய்யையும் சேர்த்துக் கிளறிவிடவும்.
எல்லாம் நன்றாகக் கலந்ததும் ஆற வைத்துச் சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
நளாயினி |