கூழ் வடாம்
தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கப் (200 கிராம்)
ஜவ்வரிசி - சிறிதளவு (10 கிராம்)
எலுமிச்சம் பழம் - 1
உப்பு - கால் கரண்டி
பச்சை மிளகாய் - 10

செய்முறை

அரிசி வடாத்துக்கு மாவு அரைத்தது போல் கிரைண்டரில் அரைக்கவும்.

அரைத்த மாவு விழுதில் தண்ணீர் அதிகம் சேர்ந்து சற்று தளர்வாக கரைத்து கொள்ளவும்.

பிறகு மாவு வெந்ததும் உப்பு, உரைப்பு எலுமிச்சம் பழச்சாறு விட்டு கலந்து ஜவ்வரிசி வடாம் போல் ஸ்பூனால் பிளாஸ்டிக் கவரில் வைத்து 3 நாட்கள் காய வைக்கவும்.

(1 கப் அரிசிக்கு 10 கப் வரை தண்ணீர் விடலாம்)

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com