கடி ஜோக்ஸ்
என்னங்க உங்களுக்கு கல்யாணம் ஆயிட்டதால, எதுக்கும் ஒரு ஆயுள் இன்சுரன்ஸ் எடுத்துக்கங்களேன்!

நீங்க வேற இதுவரைக்கும் என்னோட மனைவி, அப்படி ஒண்ணும் மோசமா நடந்துக்கலீங்க!!

******


ஆமா இந்த வீட்டுக்கு இன்னிக்கு இன்சுரன்ஸ் எடுத்திட்டேனில்ல, திடீர்ன்னு ராத்திரி வீடு எறிஞ்சு போனா எனக்கு என்ன கிடைக்கும்?

என்ன, ஒரு பத்து வருஷம் ஜெயில் தண்டனை கிடைக்கும்.

******


பெண்: டாக்டர் சார், ரொம்ப நன்றி, உங்க டிரீட் மெண்டால எனக்கு நல்ல பலன் கிடைச்சுது.

டாக்டர்: யாரு நீங்க, உங்களுக்கு நான், இதுவரை எந்த டிரீட் மெண்டும் பண்ணதில்லயே.

பெண்: எங்க மாமியாருக்கு பண்ணியிருக்கீங்களே!!

******


எஜமான்! இன்னிக்கு ஒரு அம்மா கடைக்கு வந்திருந்தாங்க. 100 ரூபாய் செருப்பை வாங்க அவங்க கிட்ட காசு இல்லாததனால ஒரு 20 ரூபா அட்வான்சு வாங்கிட்டு செருப்பை குடுத்துவிட்டிருக்கேங்க!!

ஏண்டா, அப்படி பண்ண!? அவங்க திருப்பி வரமாட்டாங்க பாரு.

இல்லீங்க, கண்டிப்பா வருவாங்க பாருங்க. நான் கொடுத்த செருப்பு இரண்டும் இடது கால்தாச்சே!!!

ஸ்ரீகோண்டு

© TamilOnline.com