அக்டோபர் 2001 : குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு

கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.

ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு

அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன்!)

குறுக்காக

3. பூசை ஒரு பூதம் காணாத தலையில்லா வேதனை (5)
6. சமயச் சடங்கு நெறி பிறழாதவர் தீவை மாற்றிக் கர்ணன் பாதி கொண்டான் (4)
7. மாம்பழம் முழுதாக இல்லாவிட்டாலும் திருடன் இடுவான் (4)
8. குபேரா, வந்தனம் தலைகளில்லாமல் அளவற்ற மகிழ்ச்சி அடைவாய் (6)
13. புள்ளிகளை இணைப்பது பங்கம் சேரக் கொடுஞ்சினம் (6)
14. திருமால் பக்தியில் முழுகப் போவதுறுதி (4)
15. வாத்தியத்தால் பின்பாட்டுப் பாடுபவன் (4)
16. முத்துப்பல்லாக விரைவில் உருவெடுக்கும், மல்லிகையல்ல (5)

நெடுக்காக

1. திருப்பி வைது தலையில் உபத்திரவத்துடன் அழுக்கையகற்றுவேன் (5)
2. மரியாதைக்குப் பொருத்துவது வீசு, கலங்கினால் தேகம் சரியில்லை (5)
4. ஒரு அடியில் கதறத் தொடங்குவது தீங்கு ( 4)
5. செல்வம் கஷ்டம் தலையிட எரியூட்டுதல் (4)
9. வாழையிலைக்குப் பதிலாகத் திறக்க வேண்டு (3)
10. ஒரு மனதான தூய தமிழில் பாராட்ட உள்ளே ஒரு யமுனைக்கரையழகி (5)
11. தமிழறியா அந்தணருக்குப் பொதுவான பூசைப் பொருட்களா?(5)
12. தோல்வியுறும்படிச் சாய் (4)
13. கலிங்கர் வம்சத்தில் தலைக்கனம் (4)

வாஞ்சிநாதன்
vanchi@chennaionline.com

குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

குறுக்காக 3. தீபாராதனை(தீ-பாரா-தனை) 6. வைதீகர் 7. கன்னம் 8. பேரானந்தம் 13 . கடுங்கோபம் 14. ஆழ்வார் 15. ஒத்தூதி 16. மாதுளம்பூ
நெடுக்காக1. துவைப்பேன் 2. சுகவீனம் 4. பாதகம் ( பாதம் -- அடி) 5. தகனம் 9. தட்டு (பெயர்ச்சொல் & வினைச்சொல்) 10. ஏகோபித்த (ஏத்த + கோபி) 11. நம்பூதிரி 12. வீழ்த்து 13. கர்வம்

© TamilOnline.com