குடைமிளகாய் தொகையல்
தேவையான பொருள்கள்

குடைமிளகாய் - 3
புளிச் சாறு - 1 1/2 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கடுகு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி

செய்முறை

எண்ணெய் தவிர்த்து, மேற்கண்ட பொருள்கள் அனைத்தையும் சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

நல்ல கனமான பாத்திரத்தில் கடுகை தாளித்துக் கொள்ளவும்.

கடுகு வெடித்து அடங்கியவுடன், அரைத்து வைத்திருப்பதை சேர்த்து சமைக்கவும்.

பாத்திரத்தில் ஒட்டாத பதத்தில், தீயிலிருந்து இறக்கினால் குடைமிளகாய் தொகையல் தயார்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com