கொத்தமல்லி தொகையல்
தேவையான பொருள்கள்

பசுமையான இளம்
கொத்தமல்லி தழைகள் - 2 கோப்பை
புளிச் சாறு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/3 கோப்பை
காய்ந்த மிளகாய் - 6
பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 தேக்கரண்டி

செய்முறை

நறுக்கிய கொத்தமல்லி தழைகளை ஒரு தேக்கரண்டி எண்ணெயில், மிதமான சூட்டில் ஒரு நிமிடத்துக்கு வதக்கவும்.

மீதமுள்ள 3 தேக்கரண்டி எண்ணெயில் காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூளை வறுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் பருப்பை சேர்த்து, பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

வதக்கிய கொத்தமல்லி தழைகள், வறுத்த காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள், உளுத்தம் பருப்பு, புளிச் சாறு, உப்பு எல்லா வற்றையும் சேர்த்து தொகையல் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவுக்கு நீர் சேர்த்துக் கொள்ளலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com