தேவையான பொருள்கள்
கேரட் - 2 தேங்காய் - ஒரு கையளவு பச்சை மிளகாய் - 4 அல்லது வறுத்த காய்ந்த மிளகாய் - 4 முந்திரி - 5 எண்ணெய் - 2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1/2தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு கடுகு - 1/4 தேக்கரண்டி பெருங்காயம் - ஒரு சிட்டிகை
செய்முறை
கேரட்டை நன்கு கழுவி, லேசாக தோல் நீக்கி பின் துருவிக் கொள்ளவும்.
முந்திரிப் பருப்புகளை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடத்திற்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு பருப்பு பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதை ஆற விடுங்கள்.
துருவிய கேரட், முந்திரி பருப்பு, வறுத்த மிளகாய், உளுத்தம் பருப்பு இவற்றுடன் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
தேவையெனில் சிறிதளவு நீர் சேர்த்துக் கொள்ளலாம்.
கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து சேர்த்துக் கொள்ளவும்.
சரஸ்வதி தியாகராஜன் |