தொகையல் வகைகள்
தொகையல்களின் சுவையே அலாதிதான். இட்லி, தோசை,சப்பாத்திக்கு தொட்டுக் கொள்வதோடு மட்டுமல்ல, சாதத்துடனும் சேர்த்து அப்படியே சாப்பிடலாம். இதோ, சில சுவையான தொகையல் செய்முறைகள் உங்களுக்காக...

Zucchini தொகையல்

தேவையான பொருள்கள்

Zucchini - 2
நறுக்கிய வெங்காயம் - 1/3 கோப்பை
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
புளிச் சாறு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை சிறிதளவு எண்ணெயில் தாளித்து வைத்துக் கொள்ளவும்.

zucchiniயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.

உப்பு சேர்த்து, மிதமான சூட்டில் வதக்கவும்.

இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டுக் கொள்ளுங்கள்.

புளிச் சாறுடன் தேவையான உப்பு சேர்த்து சட்டினி பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.

கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து சேர்த்துக் கொள்ளவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com