டாக்டர். சிந்தூரி : உலகப் புகழ்பெற்ற, இந்திய சாஸ்த்ரீய நடனக் கலைஞர். சிந்தூரி மூன்று வயது சிறுமியாக இருந்த போதே, பரதம் (குரு:கலை மாமணி பக்கிரிசாமி பிள்ளை), குச்சிப்புடி (திரு. எம்.எஸ்.சைவா, டாக்டர். வேம்பட்டி சின்ன சத்யம்) நடனப் பயிற்சி தொடங்கிவிட்டது. ஏழாம் வயதில் அரங்கேற்றம்! இன்று...1,600க்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகள் அவரது சாதனைப் பதிவேட்டில்!
மிக இளம் வயதில், இந்தியக் குடியரசுத் தலைவரின் இல்லத்தில் நடன நிகழ்ச்சியளித்த கலைஞர்களுள் டாக்டர்.சிந்தூரியும் ஒருவர் என்ற பெருமை அவரது மகுடத்தில் பதிக்கப்பெற்ற மாணிக்கமாக விளங்கு கின்றது.
இதோ மேலும் சில சிறப்புகள்:
சென்னை இசைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் (நாட்டிய விஷரதா).
1984 ஆம் ஆண்டுக்கான 'தமிழகத்தின் சிறந்த நடனக் கலைஞர்' விருது.
குழந்தைப் பருவத்திலேயே நாட்டியக் கலையழகி, நாட்டிய தரங்கிணி, நாட்டிய மணி, நாட்டியச் சுடர் போன்ற பட்டங்கள்.
1996 - பரத நாட்டியம், குச்சிப்புடியில் டாக்டர் பட்டம் (சர்வதேசப் பல்கலைக் கழகம், கலிபோர்னியா)
பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள இவர், நடன நிகழ்ச்சி நடத்தாத நாடே இல்லையெனும் அளவுக்கு உலகெங்கும் தனது நடனத்தை அரங்கேற்றியுள்ளார். இந்திய அரசின் கலாச்சாரப் பிரதிநிதி என்ற அந்தஸ்தும் இவருக்கு உண்டு.
டாக்டர் சிந்தூரி வழங்கும் உலக சமாதானத் திற்கான நடன நிகழ்ச்சி (Dance for World Peace) இம் மாதம் நடைபெறவுள்ளது.
நேரம்: டிசம்பர் 8, 2001 - 6.30 மணி இடம்: Duarte Performing Arts Center, 1401 Highland Ave., Duarte, 91010 நுழைவுக் கட்டணம்: $25, $15
மேற்கொண்டு விவரங்களுக்கு: www.sinduri.net Savithri Arts Academy: (626) 254-8965 Dr.Manorama Sharma: (714) 540-9427 Vandana & Ravi Tilak: (714) 283-2141 Dr. Uma Deperalta: (626) 292-6883 |