ஒரு சினிமா நிறுவனத்தின் பெயரை இன்னொரு சினிமா நிறுவனம் தயாரிக்கும் படத்துக்குத் தலைப்பாக வைத்து 'அமர்க்கள'ப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சரண். ஏவி.எம்.மின் தயாரிப்பில் விக்ரம்- இந்தி இறக்குமதி கிரண் நடிக்கும் படத்துக்குப் பெயர் 'ஜெமினி'.
ஐந்து ஆண்டுகளாகச் சின்னத்திரை தொடர்கள் தயாரிப்பதில் தீவிரமாக இருந்த ஏவி.எம். 'மின்சார கனவு' படத்துக்குப் பிறகு தயாரிக்கும் படம் இது. இது ஏவி.எம்.மின் 162 ஆவது படம். அடுத்தடுத்து ஏவி.எம் படம் தயாரிக்கப் போகிறது என்கிற உத்திரவாதித்தில் 163 ஆவது படத்தில் விஜய் நடிக்கப் போவதாகவும் அறிவித்து விட்டார்கள்.
படத்தை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடுவதாகவும் தேதி குறித்துவிட்டார்கள். |