மனைவி: காலையில காப்பி குடிக்கறதை ஏன் நிறுத்திட்டீங்க?
கணவன்: காப்பி குடிச்சுட்டு ஆபிஸ் போனா தூக்கம் வரமாட்டேங்கறது.
****** மருமகன்: கமலா, நான் புதுசா கண்ணாடி போட்ட பிறகுதான் நீ எவ்வளவு அழகா இருக்கேன்னு தெரியறது.
மாமனார்: மாப்ளே, நான் கமலா இல்லே! அவளோட அப்பா.
******
புதுமனைவி: அய்யய்ய... என்ன இது! இட்லி சாப்பிட்ட கையோட மாவு அரைக்க ஆரம்பிச்சூட்டீங்க?
கணவன்: ஹி...ஹி... கல்யாணத்துக்கு முன்னாடி ஹோட்டல்லே காசு கொடுக்காம சாப்பிட்டு பழக்கம் ஆயிடுச்சி.
******
கமலா: எப்படி உன் கணவர் பிக்பாக்கெட் அடிக்கிறவருன்னு கண்டுபிடிச்சே?
விமலா: கறிகாய் நறுக்க பிளேடுதான் உபயோகப்படுத்தணும்னு சொல்லிட்டாரே!
ஹெர்குலிஸ் சுந்தரம் |