நாதஸ்வரம்
நமது அன்றாட இசை அனுபவங்களில் நாதஸ்வரம் தனிச் சிறப்பான இடம் பெற்றுள்ளது. குறிப்பாக கோயில்களில் நாதஸ்வரம் ஒரு பின்னணி இசையாகவே உள்ளது.

ஐம்பதுகளில் திரைப்படப் பின்னணி இசையில் நாதஸ்வரம் தனியாட்சி செலுத்தியது. ஜெமினி வாசன் உருவாக்கிய ஒளவையார் திரைப்படத்தில் ஒளவையாரை தேடிச் சென்று மன்னர் எதிர்கொண்டு வரவேற்ற காட்சியில் இஞ்சிக்குடி சகோதரர்களே தோன்றி வாசித்தார்கள்.

எம்.ஏ. வேணு உருவாக்கிய புகழ்பெற்ற எல்லா திரைப் படங்களுக்கும் 'டைட்டில்' இசைக்கு நாமகிரிபேட்டையின் விறுவிறுப்பான இசையே பெருமை சேர்த்தது.

தில்லானா மோகனாம்பாளில் மதுரை சேதுராமன் பொன்னு சாமியின் நலந்தானா பாட்டும், எம்.வி. ராமன் உருவாக்கிய கொஞ்சும் சலங்கையில் காருகுறிச்சியின் சிங்காரவேலனே பாட்டும் இன்றும் என்றும் அமர கானங்கள்.

© TamilOnline.com