குழந்தைகள் உலகமென்பது பெரியவர்களால் அளவிட முடியாதது. அந்த உலகத்தில் பெரிய வர்கள் எவரும் அத்துமீறி நுழைந்துவிடவும் முடியாது. குழந்தைகளின் உலகத்தை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது என்பதே மிகப் பெரிய கலை. அனுதினமும் அவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதற்காக பெற்றோர்கள் முதலில் சந்தோஷமாக இருக்க வேண்டும். பெற்றோர் களுக்குக் குட்டிக் கதைகள் பல தெரிந்திருக்க வேண்டும். குட்டிக் கதைகளை எப்படிச் சொல்வது என்கிற கலையையும் பெற்றோர்கள் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும்.
பெரும்பாலும் தமிழில் குழந்தைகளுக்கான பத்திரிகைகள் பல வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவைகளில் சிலவை மட்டுமே குழந்தைகளுக்கு மகிழ்வூட்டும்படியாக அமைந் துள்ளன. மற்றவைகள் அனைத்தும் அறிவு புகட்டும்படியாகவே பெரும்பாலும் அமைந் துள்ளன. பத்திரிகைகளைவிட குழந்தைகளுக் கான படங்கள் என்பது வெகு அரிதாகவே எடுக்கப்படுகின்றன. டாக்குமெண்டரி படங்கள் சில எடுக்கப்பட்டாலும் அவை குழந்தைகளின் பிரச்சனைகளைப் பற்றி விளக்கும் பெரியவர் களுக்கான படங்களாகவே தொக்கி நிற்கின்றன. கமர்ஷியல் படங்களிலும் குழந்தைகளைப் பெரும்பாலும், பக்கத்துவீட்டு அண்ணன் மார்களுக்குக் காதல் தூது போவது போலவும், காதலிப்பவர்களுக்கு டெலிபோன் டயல் செய்து தருவது போலவுமே சித்திரிக்கிறார்கள்.
குழந்தைகள் பிரச்சனைகளைக் குழந்தை களுக்குப் புரிகிற வகையில் உருவாக்கப்பட்ட படங்கள் என்று விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த வகையில் தீபிகா நிறுவனம் தயாரித்துள்ள 'குறும்புப்படம்' ஒரு வித்தியாசமான முயற்சி. இந்தப் படத்தை இளம் இயக்குனர் ஜெயக் குமார் இயக்கியுள்ளார்.
படத்தின் கதை: ஒரு டாக்குமெண்டரி திரைப்பட விழாவிற்காக இயக்குனர் ஒருவர் குழந்தைகளின் உலகம் பற்றிய படத்தை எடுக்க விரும்புகிறார். அதற்காக அவருடைய நண்பரின் குழந்தையை நடிக்க வைக்கக் கேட்க நண்பரின் வீட்டுக்குச் செல்கிறார். அவர் வீட்டிற்குச் சென்ற வேளையில் அந்தச் சின்னப் பையன் கப்பல், தவளை, காற்றாடி போன்ற பொருட் களைக் காகிதத்தில் செய்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.
இயக்குனரிடன் அந்தப் பொருட்களைக் காட்டி மகிழ்ச்சியுடன் சிரிக்கிறான் அந்தச் சிறுவன். '·பேன் ஏன் இவ்வளவு வேகமாகச் சுத்துது?' என்று காகிதக் காற்றாடியைப் பார்த்து இயக்குனர் கேட்கிறார். அதற்கு அந்தப் பையன் 'மெட்ராஸில நல்ல வெயில் அதனால ஐஞ்சுல போட்டுருக்கேன்' என்று அப்பாவியாய்ப் பதில் சொல்வான்.
அந்தப் பையனுடைய அப்பாவும் அவனை நடிக்க வைக்கச் சம்மதம் தெரிவித்து விடுவார். அதன்படி ஷ¤ட்டிங் ஆரம்பமாகும். முதல் காட்சியில் சிறுவர்கள் மகிழ்ச்சியாக தண்ணீர் பைப்பை வைத்து செயற்கை மழை உருவாக்கும் போது பெரியவர் ஒருவர் வந்து சிறுவனை கன்னத்தில் அறைந்து விட்டு, பைப்பை அடைப்பார்.
இந்தக் காட்சியில் டிரவுசர் பையில் வைத்திருக்கும் காகித தவளை மற்றும் கப்பல்கள் கசங்கி விடக்கூடாது என்பதற்காக, அந்தச் சிறுவன் தரையில் விழும்படியான காட்சியில் மறுபக்கமாகவே சரிந்து விழுவான். கடைசியில் இயக்குனர் அவனிடமிருந்த காகித விளையாட்டுப் பொருட்களைப் பிடுங்கி சகதியில் எறிந்து விட்டுத் தொடர்ந்து காட்சியை வெற்றிகரமாக எடுத்து முடிப்பார்.
இதே இயக்குனர் வீட்டிற்கு வரும் போது இந்தக் காகித விளையாட்டுப் பொருட்களைப் பார்த்து பாராட்டினார். இப்போது என்னடா வென்றால், அதைப் பிடுங்கி சகதியில் எரிகிறார். இந்தப் பெரியவர்களே இப்படித்தான். அவர் களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று சிறுவன் நினைப்பதாகப் படம் முடியும்.
'குறும்புப்படம்' வெறும் 10 நிமிடங்களே ஓடக்கூடியது என்றாலும், குழந்தைகளுக்குப் புரிகிற விதத்தில் ஆழமான விசயத்தை எளிதாகச் சொல்லியிருக்கிறார்கள். 'குட்டி' படத்தில் நடித்த மாஸ்டர் சூரஜ் இந்தப் படத்திலும் நடித்திருக்கிறான்.
"திரைப்படத்திற்குள் திரைப்படம் என்கிற குறும்பைப் பண்ணியிருப்பதால் இது குறும்படம் என்று அல்லாமல் குறும்புப்படம் ஆகிவிட்டது. இன்றைய நிலையில் பெரும்பாலும், குழந்தை களின் மனநிலையை சினிமா நடிகர்களே ஆக்கிரமித்திருக்கிறார்கள். அவர்களுடைய குழந்தைத் தனத்தை மறக்கடிக்கும் படியாகவே பாடத்திட்டங்கள், பெற்றோரின் கண்டிப்பு ஆகியவைகளும் இருக்கின்றன. அதிலும் தற்போது அவர்களை வன்முறை மிகவும் ஆக்கிரமித்திருக்கிறது. அவர்கள் விளையாட்டுப் பொருட்களில்கூட வில், கத்தி, அணுகுண்டு, ராக்கெட் ஆகியவைகளையே செய்யும் போக்கும் இருக்கிறது. அந்தளவிற்குக் குழந்தை கள் மனதில் வன்முறையை விதைத்து விட்டோம்.
குழந்தைகள் படம் பண்ணுகிறோம் என்று சொல்லிக் கொண்டு நாம் குழந்தைகளை நாம் எதிர்பார்க்கிறபடி நடிக்கச் சொல்லி மிகவும் தொந்தரவு செய்கிறோம். அதை விளக்கும் வகையிலேயே இந்தப் படத்தை நான் இயக்கி யிருக்கிறேன். குழந்தைகளை மகிழ்வூட்டும் படியான திரைப்படங்கள் எடுக்கப்பட வேண்டும்" என்று கூறுகிறார் படத்தின் இயக்குனர் ஜெயச்சந்திரன்.
'குறும்புப்படம்' பூங்குயில் திரைப்பட சங்கத்தின் குறும்படப் போட்டிக்கு அனுப்பு வதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்குயில் திரைப்பட சங்கம் 'பூங்குயில்' என்ற குழந்தைகள் பத்திரிகையையும் வந்தவாசி யிலிருந்து கொண்டு வருகிறது.
குறும்புப்படத்தைத் தாயாரித்த தீபிகா நிறுவனம் குழந்தைகள் தொடர்பான திரைப் படங்கள் பலவற்றைத் தயாரித்துள்ளது. 'Lost childwood', 'Raising from Rags' போன்ற குழந்தைகள் பிரச்சனை தொடர்பான குறும் படங்களையும் தாயாரித்துள்ளனர். அதுபோக குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நாடகப் பட்டறைகள் போன்றவைகளும் நடத்தியுள்ளனர்.
குழந்தைகளே குழந்தைகளுக்காக நடத்தும் 'சுட்டிக்கூத்து' என்ற நிகழ்ச்சியொன்றையும் நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர். பிரபல தனியார் தொலைக்காட்சிச் சேனல்களில் இந் நிகழ்ச்சியை ஒளிபரப்புவது தொடர்பான பேச்சுவார்த்தையை மேற்கொண்டிருக் கின்றனர்.
குழந்தைகளுக்கான படங்களைப் பெற விரும்புவோர் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் தங்களுடைய குழந்தைகளை பங்கு பெற அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்...
தீபிகா 18, லேண்டன்ஸ் சாலை, சென்னை-600016 தொலைபேசி:6423930, 6412124
சரவணன் |