டிசம்பர் 2001 : குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.

ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன்!)

குறுக்காக

3. வெளியே காப்பவன் தாவி அரசன் சிறைப்பட ஓராலயம் (5)
6. சிலம்பதில் கடிப்பதில்லாது பாழ்நிலை (4)
7. மரியாதைக்குட்பட்ட பெண்ணுக்கு உரிமையுடன் சேர்ப்பது எளிதல்ல (4)
8. முட்டாள்! தேவாரம் அழைக்காமல் மாற்றிய நல்ல நாற்காலிக்கு வேண்டும் (6)
13. முளைக்காத கட்டா? வேறுபடச் செய்வது வினையாக முடியலாம் (6)
14. தாத்தா! பள்ளியிறுதியில் சேர உழைப்பவர் (4)
15. ராமன் தலையிட புகலிடம் நாடி வந்தவன் புத்தகம் படிப்பதற்கில்லை (4)
16. தொழிற்சாலை மேலே உலவும் இனிய கரம் (5)

நெடுக்காக

1. தூய்மையாகச் சாப்பிட்டேன்...(5)
2. சேர வேண்டிய இடம் உத்தமி இறுதியில் சேர்ந்தால் தெய்வம்தான் (5)
4. பாதிப்பு தோன்ற அக்கா இடையைச் சுற்ற வேட்கை (4)
5. துக்கம் விரக்தியில் தொடங்க கிராமத்து மக்கள் (4)
9. கலாட்டா அழகி பாதி பொலிவுடன் ... (3)
10. பத்திரமாக வைத்திருக்க பெண் பாதி கட்டம் கலைத்தாள் (5)
11. இடையில் ஆயுதத்துடன் தழுவு, அதுதான் காதல்கவிதை வகை! (5)
12. தேர்வில் வெற்றிபெற விஸ்வரூபம் செய்வரோ? (4)
13. கூப்பிடு, கவிதையில்லாத பாம்பு ஓரம் வரும் (4)

வாஞ்சிநாதன்
vanchi@chennaionline.com

குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

குறுக்காக: 3. மாதாகோவில் 6. சிதிலம் 7. கடினம் 8. தேக்குமரம் 13. விளையாட்டாக 14. பாட்டாளி 15. அகராதி 16. கரும்புகை
நெடுக்காக:1. புசித்தேன் 2. இலக்குமி 4. தாக்கம் 5. விசனம் 9. ரகளை 10. பெட்டகம் 11. அகத்திணை 12. நெட்டுரு 13. விளிம்பு

© TamilOnline.com