·புரூட்டி நட்டி மைக்ரோவேவ் கேக்
தேவையான பொருள்கள்

தண்ணீர் - 3/4கிண்ணம்
நறுக்கிய உலர்ந்த பிளம்ஸ், உலர்ந்த அத்திப் பழம், கொட்டை நீக்கிய இலந்தம் பழம் கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் ஆகியவற்றின் கலவை- 3/4கிண்ணம்
உலர்ந்த திராட்சை - 1/3கிண்ணம்
நாட்டு சர்க்கரை - 1 கிண்ணம்
வெண்ணெய்த் - 1/2 துண்டம்
முட்டை (லேசாக அடித்தது) - 1
அக்ரோட் (பெரிய துண்டுகள்), நறுக்கிய வாதுமை, Pecans (பெரிய துண்டுகள்) கலவை.- 1/2 கிண்ணம்
சலிக்காத மைதா மாவு - 1 1/2 கிண்ணம்
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
சோடா மாவு - 1//4 தேக்கரண்டி
வாதுமை எஸன்ஸ் - 1/2 தேக்கரண்டி
வெணிலா எஸன்ஸ் - 1/2 தேக்கரண்டி

செய்முறை

உலர் பழங்கள், கொட்டைகளைக் கண்ணாடிப் பாத்திரத்தில் கொட்டி, தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

இந்தக் கலவை கொதிக்கும் வரை மைக்ரோவேவ் செய்யவும்.

கலவையை நன்கு கலக்கி விடவும்.

நாட்டு சர்க்கரையை சேர்க்கவும்.

பிறகு முட்டை (லேசாக அடித்தது), பேக்கிங் பவுடர், சோடா மாவு சேர்த்து நன்கு கலக்கவும்.

வாதுமை எஸன்ஸ், வெணிலா எஸன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.

இறுதியாக மைதா மாவை சேர்த்து நன்கு கலக்கவும்.

ஹை பவரில் 3 நிமிடங்களுக்கு மைக்ரோவேவ் செய்யவும்.

ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை கேக் எப்படி உள்ளது என்பதைப் பார்த்து, பாத்திரத்தை சுழற்றி விட வேண்டியது அவசியம்.

மீண்டும் 2 நிமிடத்துக்கு மைக்ரோவேவ் செய்யவும் அல்லது கேக் மையப் பகுதியில் குச்சியை சொருகி எடுத்தால் ஒட்டாது வரும் பதத்தில் எடுக்கவும். இதோ சுவையான ·புரூட்டி நட்டி மைக்ரோவேவ் கேக்! தயார்.

மைக்ரோவேவ் அடுப்புகளின் திறன் (wattage) வேறுபடும் என்பதால் மைக்ரோவேவ் செய்யும் போது ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை கேக் எப்படி உள்ளது என்பதை சரி பார்ப்பது அவசியம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com