தேவையான பொருள்கள்
உலர்ந்த திராட்சை - 1/8 கிண்ணம் நறுக்கிய உலர்ந்த பிளம்ஸ் - 1/8 கிண்ணம் உலர்ந்த அத்திப் பழம் (பாதியாகிண்ணம் பிளந்தது) - 1/8 கிண்ணம் கொட்டை நீக்கிய இலந்தம் பழம் - 1/8 கிண்ணம் கொட்டை நீக்கியபேரீச்சம் பழம் - 1/8 கிண்ணம் அக்ரோட் (பெரிய துண்டுகள்) - 1/4 கிண்ணம் நறுக்கிய வாதுமை - 1/4 கிண்ணம் Pecans (பெரிய துண்டுகள்) - 1/8 கிண்ணம் துருவிய ஆரஞ்சு தோல் - 1/2 தேக்கரண்டி துருவிய எலுமிச்சை தோல் - 1/2 தேக்கரண்டி லவங்கப் பட்டைத் தூள் - 1/2 தேக்கரண்டி மசாலாப் பொடி - 1/2 தேக்கரண்டி கருப்பஞ் சாறு - 1/4 கிண்ணம் தண்ணீரில் இன்ஸ்டன்ட் காபித் தூள் கலவை(சூடான நீர்) - 1 தேக்கரண்டி ஆப்பிள் பழச்சாறு - 1/2 கிண்ணம் ஆரஞ்சுப் பழச்சாறு - 1/8 கிண்ணம் மைதா - 1 கிண்ணம் பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி உப்பு - ஒரு துளி வெண்ணெய் (அறை வெப்ப நிலையில்) உப்பு போடாதது - 1 துண்டம் நாட்டு சர்க்கரை - 1 கிண்ணம் முட்டைகள் (அறை வெப்ப நிலையில்) - 4 வெணிலா எஸன்ஸ் - 1/2 தேக்கரண்டி வாதாம் எஸன்ஸ் - 3 துளி ஆரஞ்சு எஸன்ஸ் - 2 துளி எலுமிச்சை எஸன்ஸ் - 2 துளி
செய்முறை
உலர் பழங்கள், கொட்டைகள் மற்றும் பொடித்த பழத் தோல்கள் ஆகியவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு கலக்கவும்.
அதனுடன் கருப்பஞ்சாறு, பழச்சாறு, காபி கலந்த நீர், மசாலாப் பொடி மற்றும் லவங்கப்பட்டைத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்தக் கலவையை 3-4 மணி நேரம் மூடி வைக்கவும்.
275 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு ஓவனை முன்கூட்டியே சூடாக்கவும்.
மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து சல்லடையில் சலித்துக் கொள்ளவும்
குறைந்தது 3 முறையாவது சலித்தால்தான் கேக் மென்மையாக வரும். இது மிக மிக முக்கியம்.
நாட்டு சர்க்கரையுடன் வெண்ணெய் கலந்து க்ரீம் பதத்திற்கு நன்கு அடிக்கவும்.
முட்டைகளை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு அடிக்கவும்.
எல்லா எஸன்ஸ்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த மாவுக் கலவையை, மூடி வைத்துள்ள உலர் பழங்கள் / கொட்டைக் கலவையுடன் சேர்க்கவும்.
மேலாகக் கொட்டி மூடினால் மட்டும் போதுமானது, அதிகப்படியான அழுத்தமோ, கிளறுவதோ கூடாது.
பேக்கிங் செய்யவுள்ள பாத்திரத்தில் எண்ணெய் தடவி, ஓரங்களில் மெழுகு தடவிய காகிதத்தைப் பொருத்தவும். காகிதத்தையும் கிரீஸ் செய்யவும்.
காகிதத்தின் மீது லேசாக மாவுப் பூச்சு செய்யவும்.
கேக் செய்வதற்கான கலவையை இந்தப் பாத்திரத்துக்கு மாற்றி 275 டிகிரி பாரன் ஹீட்டில் நல்ல பதம் வரும் அளவுக்கு (கேக் மையப் பகுதியில் குச்சியை சொருகி எடுத்தால் ஒட்டாது வர வேண்டும்) பேக் செய்யவும்.
இந்த கேக் இரண்டாம் நாள் சாப்பிடும் போது மிகவும் சுவையாக, மென்மையாக இருக்கும்.
குறிப்பு
வெண்ணெய் மற்றும் முட்டைகள் அறை வெப்ப நிலையில் இருப்பது அவசியம்.
மசாலாப் பொடி: ஜாதிக்காய், லவங்கப் பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய் பொடிகளின் கலவை
சரஸ்வதி தியாகராஜன் |