குழம்பு வகைகள் - பாகற்காய் பிட்லை
தேவையான பொருட்கள்

பாகற்காய் - 1 (பெரிய சைஸ்)
துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
கொண்டை கடலை(வெள்ளை) - 1 கரண்டி
புளி - எலுமிச்சம்பழ அளவு(சிறிய சைஸ்)
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1/2 கரண்டி
தனியா - 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
தேங்காய் தூள் - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம் - வாசனைக்கு
வெல்லம் - ருசிக்கு 1 ஸ்பூன்

செய்முறை

கொண்டை கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும். துவரம் பருப்பை குக்கரில் வேக வைத்து மசித்து வைக்கவும். புளியை வெந்நீரில் கொதிக்க விட்டு நன்றாக கரைக்கவும். அத்துடன் ஊற வைத்த கொண்டை கடலை, உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்க விடவும். பாகற்காய் (நறுக்கிய) துண்டுகளை (வாணலியில் எண்ணெய் விட்டு லேசாக வதக்கி) கொதிக்கும் சாம்பாரில் போடவும். கடலை பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், மிளகு, சீரகம், பெருங்காயம் இவற்றை பொன்னிறமாக வறுத்து 2 ஸ்பூன் தேங்காய் தூளை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த விழுதுடன் வெந்த பருப்பை போட்டு கலந்து கொதிக்கும் குழம்பில் போடவும். வெல்லத் தூளை போடவும். குழம்பு கொதித்ததும் கீழே இறக்கி வைக்கவும். வாணலியில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து மீதி உள்ள 2 ஸ்பூன் தேங்காய் தூளை இளஞ்சிவப்பாக வறுத்து போடவும். கருவேப்பிலை, கொத்தமல்லி போட்டு மூடி வைக்கவும்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com