பொறியல் வகைகள் - பாகற்காய் ஸ்ட·ப்
தேவையான பொருட்கள்

பாகற்காய் - 1
பெரிய வெங்காயம் - 1
பெரிய தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1 அல்லது 2 (காரத்துக்கு ஏற்ப)
எண்ணெய் - 1 கரண்டி
கடுகு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

பாகற்காயை 2 அல்லது 3 துண்டுகளாக குறுக்காக வெட்டவும். உள்ளே இருக்கும் விதைகளை நீக்கவும். [சிறிய சைஸ் குழாய் போல் இருக்க வேண்டும்]

வாணலியில் எண்ணெய்விட்டு நிதானமாக எரியும் அடுப்பில் வைத்து பாகற்காய் துண்டுகளை போட்டு தேவையான உப்பு சேர்த்து 5 அல்லது 10 நிமிடங்கள் (பாகற்காய் உடையாமல்) வதக்கவும்.

நறுக்கிய வெங்காய துண்டுகளுடன் தக்காளி, பச்சை மிளகாய் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து அரைத்த விழுதை சுருள வதக்கவும்.

வெந்த பாகற்காய்க்குள் வதங்கிய விழுதை நிரப்பி மீண்டும் சிறிது நேரம் வதக்கவும்.

சுவையான பாகற்காய் ஸ்ட·ப் ரெடி.

குறிப்பு

பாகற்காயை எண்ணெயில் வதக்குவதற்கு பதிலாக சிறிது நீரில் வேக விடலாம். எண்ணெய் அளவு குறையும்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com