பழிக்குப் பழியில் ....
தமிழக அரசியல் எதாவது ஒரு பிரச்ச னைக்குள் இழுபட்டுவிடுகிறது. சட்டக் கல்லூரி மாணவர்கள் போலீசாரால் காட்டுமிரண்டித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் மாணவர்களையும் அரசியல்வாதி களையும் களம் இறக்கியது.

இரண்டாவது உலகத் தமிழராய்ச்சி மாநாட் டையொட்டி சென்னை மெரீனாவில் கண்ணகி சிலை1968ல் நிறுவப்பட்டது. கடந்த 6ம் தேதி ஆந்திரத்தின் நெல்லூரிலிருந்து சென்னைக்கு வந்த லாரி சிலை அமைந்திருந்த பீடத்தில் மோதியது. சிலையின் பீடத்தைச் சரி செய்வார் கள் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் பொதுப்பணித்துறையினர் கடந்த 13ம் தேதி சிலையை அகற்றியுள்ளனர். இது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத் தியது. கண்ணகி சிலையை அதன் உயரம் அமைப்பு மாறா வண்ணம் மீண்டும் அதே இடத்தில் நிறுவ உத்தரவிட வேண்டும். வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது என்று தனித் தனியே உயர்நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மனுக்களை விசாரித்த சென்னை முதலாவது டிவிஷன் பெஞ்ச் அளித்த உத்தரவு சிலையை நிறுவ அரசுக்கு பரிந்துரை செய்ய அமைக்கப் பட்டுள்ள வல்லுநர் குழு கண்ணகி சிலையை நிறுவுவது தொடர்பான இறுதி முடிவு எடுக்க கூடாது என தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால் சிலை அகற்றலுக்கு எதிராக அதிமுக தவிர பெரும்பாலான எதிர்கட்சிகள் போராட் டத்தில் குதித்துள்ளனர். பண்பாட்டுப் புரட்சி வேண்டும் என்று 'கண்ணகி சிலை' அகற்றல் அதிமுக அரசுக்கு எதிராக போராடுவதற்கான ஓர் வாய்ப்பை அரசியல் கட்சிகளுக்கு கொடுத்துள்ளது. எழுத்தாளர்கள், கலைஞர்கள், கலாசாரப் பேரவைகள் உள்ளிட்ட அமைப்பு கள்கூட அரசியல் கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தத் தயாராகிவிட்டனர்.

இன்னொருபுறம் டில்லியில் உள்ள பெரியார் யைமம் இடிக்கப்பட்டுள்ளது. இதற்கெதிராக தமிழகத்தில் வீரமணி சங்கலிப் போராட்டம் நடத்தியுள்ளார். இந்த இடிப்புக்கெதிராக ஒன்றுபட்ட இயக்கம் கூட்ட முயற்சி செய் கிறார். ஆனால் ஜெயலலிதா ஆதரவாளராக வீரமணி உள்ளமையால் அதிமுக எதிர்ப்பு கட்சிகள் இந்த விஷயத்தில் பெரும் போராட் டம் எதிலும் கலந்து கொள்வதாகத் தெரிய வில்லை.

பெரியார் வழிவந்த தமிழ்மறைத் தலைவர்கள் இந்த இடிப்புக்கு கண்டனமோ போராட்டமோ ஈடுபடுவதாக தெரியவில்லை. மாறாக இந்த போராட் டத்தை வீரமணி என்னும் தனிநபரு டன் சுருக்கப்பட்ட பிரச்சனையாகப் பார்க்கின்றனர்.

அந்தளவிற்கு தமிழக அரசியல்வதிகளின் பொறுப்புணர்வும் அக்கறையும் தரம் தாழ்ந் துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிகழ்வும் சம்பவங்களும் அரசியல் கட்சிகளின் 'அரசியல் நடத்தும்' நிகழ்ச்சி நிரலில் முதலிடம் பெற்று வருகின்றன. முன்பு ஜெய லலிதா அதிமுக நபர்கள் ஊழல் குற்றச்சாட்டில் கைது, நீதிமன்ற வழக்குகள் என தொடர்ந்தன. பிறகு திமுக தலைவர் கருணாநிதி ஸ்டாலின் உட்பட பலரும் கைது சிறையடைப்பு என தொடர்ந்தன.

மீண்டும் திமுக மீதான வழக்குகள், கைதுகள் தொடரும் என அதிமுக அரசு கூறிவருகிறது. திமுக தலைவர் 'தாம் எதையும் சந்திக்கத் தயார்' என பதிலுக்கு பதில் கொடுத்து வருகிறார். மேலும் கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவிவிட போராட்டம் மேற் கொள்ளப்போவதாகவும் அறிவித்துள்ளார். இந்த சிலையை முன்பு கருணாநிதியே திறந்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக அதிமுக திமுக இடையிலான அக்கப் போர் தமிழக அரசியலின் நகர்வின் மைய மாகிறது. மக்கள் நலப் பிரச்சனைகள் என்பது எல்லாம் எங்கோ காணாமல் போய்விடுகின்றன.

ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் மீதான வழக்குகளை தனிநீதிமன்றங்கள் விசாரித்து தீர்ப்புக் கூறி வருகின்றன. முன்பு கொடைக் கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு , டான்சி நில ஊழல் வழக்கு ஆகியவற்றில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். பின்னர் இந்த தண்டனைகளிலிருந்து உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.

நிலக்கரி ஊழல் வழக்கில் இருந்துகூட ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து ஜெயலலிதா படிப்படியாக விடுவிக்கப்பட்டுச் செல்வது அதிமுக தரப்பில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் டான்சி நில ஊழல் வழக்கில் ஜெயலலிதா விடுவிப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஜனவரி 7ம்தேதி விசாரணைக்கு வருகிறது.

ஜெயலலிதாவின் எதிர்கால அரசியலுக்கு சாதகமான சமிக்ஞைகள் வரத் தொடங்கி யுள்ளன.

பாஜக , அதிமுக உறவு தற்போது இல்லை என்பதை ஜனாகிருஷ்ணமூர்த்தி தெளிவுபடுத்தி இருந்தார். ஆனால் இப்போது கூட்டணி மாற்ற வேண்டிய தேவை சூழ்நிலை எதுவும் உருவாக வில்லை. இந்நிலையில் திமுகவுடன் உடனடி யாக பகைமையை சந்திக்க பாஜக தயாராக இல்லை. திமுக, அதிமுக இரண்டையும் ஒரு வாறு சமாளித்து செல்வதையே தனது தந்திர மாக பாஜக கொண்டுள்ளது.

ஆக மொத்தத்தில் தமிழக அரசியல் கட்சி களின் அரசியல், பழிவாங்கும் அரசியல் என்ற பிணைப்பில்தான் பிண்ணப்பட்டுள்ளது.

துரைமடன்

© TamilOnline.com