'கிங்' வைரமுத்து எழுதிய பாப் பாடல்கள்
'சேது', 'தில்' வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் பிஸினஸ் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றவர் விக்ரம். 'காசி' க்கு அடுத்தபடியாக 'கிங்' என்ற படம் வெளிவர இருக்கிறது.

இப்படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து ஆறு பாடல்களை அருமையாக எழுதியுள்ளார்.

தேவன் பாடிய 'சகியே போகாதே போகாதே' உன்னிகிருஷ்ணன், சுஜாதா, நித்யஸ்ரீ பாடிய 'காதலாகி காதலாகி...' திப்பு பாடிய 'சேர்ட்டர்டே சேர்ட்டர்டே....' சங்கர் மகாதேவன் மற்றும் மஹாலெட்சுமி இணைந்து பாடிய 'அச்சுவெல்லம் பச்சரிசி...'' மாதங்கியின் மயக்கும் குரலில் 'சேளங்குரா சேளங்குரா....' திப்பு பாடிய 'தட்டி தட்டி நெஞ்சுக்குள்ள....' ஆகிய பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

படத்தில் இடம் பெறும் இந்த பாடல்களை தவிர ஆல்பத்திற்காக மூன்று பாடல்களை பதிவு செய்துள்ளார்கள்.

இந்த அனைத்து பாடல்களும் தினா இசையில் பதிவாகியது. விக்ரம்-சினேகா நடிக்கும் இந்தபடத்தை புதியவர் சாலமன் இயக்கி வருகிறார். தயாரிப்பு - கிருஷ்ணகாந்த்.

சந்துரு

© TamilOnline.com