தமிழில் பேச.... கற்க...
முதன் முறையாக தமிழ் பேச, கற்க, மின்னஞ்சல் அனுப்ப என மொத்தம் 13 வகையான 'இளங்கோ' தமிழ் மென்பொருள் களை கேட்கிரா·ப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த கேட்கிரா·ப் டிஜிட்டல்ஸ் நிறுவனம் அண்மையில் அறிமுக மான விண்டோஸ் எச்.பி பயன்பாட்டுத் தளத்தில் இயங்கக்கூடிய புதிய தமிழ் மென்பொருளினை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் தமிழில் பேச, கற்க, மின்னஞ்சல் அனுப்ப எனப் பல்வேறு தேவைகளுக்கேற்ப 13 வகையான இளங்கோ தமிழ் மென்பொருள்களையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ் மென்பொருள் வடிவமைப்பில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் இந் நிறுவனம் கடந்த 13 வருடங்களாக 'இளங்கோ' என்கிற முத்திரைப் பெயரில் தமிழ் மென் பொருள்களை வடிவமைத்து சந்தையில் விற்பனைக்கு வைத்து வருகிறது.

இந்நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப் பட்டிருக் கும் 'இளங்கோ பெர்சனல்' என்ற மென் பொருளானது எட்டு விதமான தமிழ் எழுத்து வடிவங்களையும், 250 வகையான கிளிப் ஆர்ட்டுகளையும் உள்ளடக்கியிருக்கிறது.

'இளங்கோ மல்டி லிங்குவல்' எனப்படும் அடுத்த வகையில் தமிழ் உட்பட 11 மொழிகளில் மின்னஞ்சல் அனுப்பும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

தமிழ் உட்பட 14 மொழிகளில் அத்தியா வசியத் தேவைகளுக்குப் பயன்படும் சில குறிப்பிட்ட வார்த்தைகளை உச்சரித்துக் காண்பிக்கும் திறன் கொண்ட 'இந்தியா ஸ்பீக்' என்னும் மென்பொருளினை உள்ளடக்கிய 'இளங்கோ தமிழ் இ-ஸ்பீக்' என்ற மென் பொருளையும் தயாரித்திருக்கிறது.

'தமிழ் இ-லேர்ன்' என்ற மற்றொரு மென் பொருளில் 14 விளையாட்டுக்களின் மூலம் தமிழ் மொழியைக் கற்கும் வசதி கொண்ட தேன்மொழி என்னும் மென்பொருள் இணைக்கப்பட்டுள்ளது. விளையாட்டின் மூலம் தமிழைக் கற்றுத் தர வெளிவந்திருக்கும் முதல் மென்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

'பால்ஸ் டிக்ஷ்னரி' ஆங்கிலம் தமிழ் அகராதி யுடனான 'இளங்கோ -இ-டியூட்டர்' என்ற மென்பொருளையும் தயாரித்திருக்கிறார்கள். இது போக அலுவலக உபயோகத்திற்கென்று தனியாக வடிவமைக்கப்பட்ட மென்பொருள்கள் பலவற்றையும் இந் நிறுவனம் தயாரித்துள்ளது.

"பல்வேறு விதமான பயன்பாட்டாளர்களுக்கும் உதவும் வகையில் அவரவர்களுக்கென தனித் தனியான மென்பொருளை நாங்கள் அறிமுகப் படுத்தியுள்ளோம். தமிழ் பேச, கற்க, எழுத சில மென்பொருட்களும் அன்றாடத் தேவை களுக்கென சில மென்பொருள்களும், இத் துறையில் வல்லமை பெற்றோர்களுக்கான சில மென்பொருட்களும் இதில் அடங்கும்.

ரூ.500 விலையில் அறிமுகமாகியிருக்கும் எங்களது மென்பொருள்களானது கணினியில் தமிழைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை உயர்த்தும் என உறுதியாக நம்புகிறோம்" என்கிறார் கேட்கிரா·ப் நிறுவனத்தின் தலைவர் எ.இளங்கோவன்.

மேலும் அவர்' "1988-இலிருந்து தமிழ் மென்பொருள் தயாரிப்புப் பணிகளை மேற் கொண்டு வருகிறோம். தமிழ் மொழி வழியாக கணினித் தொழிநுட்பத்தில் எதுவும் செய்ய முடியும் என்பதை அனைவருக்கும் புரிய வைப்பதே எங்களின் அடிப்படை நோக்கம்" என்றும் தெரிவித்தார்.

தமிழ் மொழி தெரியாதவர்களுக்கு தமிழ் பேசக் கற்றுத் தரும் வகையில் அமைக்கப் பட்டுள்ள மென்பொருள் 14 மொழிகளின் வழியாக தமிழைக் கற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தரும் மென்பொருளில் உயிர் மெய் எழுத்துக்கள் பாகுபாடு, ஆண்பால், பெண் பாலுக்குரிய பிரிவினைகள், வினை மற்றும் சொல்லாக்கப் பிரிவுகள் என தமிழ் இலக் கணத்தைத் தெளிவாக இடம் பெறச் செய்திருக்கிறார்கள்.

தமிழில் கணக்கு வழக்கு பார்க்க, பத்திரி கைகள் வடிவமைக்க, போட்டா ஷாப்பில் உபயோகிக்க, டேட்டா பேஸ் உண்டாக்க, மின்னஞ்சல் அனுப்ப, அனிமேஷன் செய்ய, தமிழ் மொழியில் பேச, தமிழ் மொழியில் எழுத... என பலதரப்பட்ட சேவைகளையும் இந்த மென் பொருள்கள் அளிக்கின்றன.

சமீபத்தில் நடந்த கணித்தமிழ் சங்க தமிழ் மென்பொருட்கள் மாநாட்டில் இந்த மென் பொருட்களை டாக்டர். மு.ஆனந்தகிருஷ்ணன் வெளியிட அருள்மகிழ்னன் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேட்கிரா·ப் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள...

கேட்கிரா·ப் டிஜிட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட்
2, வீட் கிராப்ட் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை-600 034
தொலைபேசி: 91-044-8256812, 8223825
மின்னஞ்சல்:elangotamil@cadgraf.com
இணையத்தளம்:www.cadgraf.com

சரவணன்

© TamilOnline.com