தேவையான பொருட்கள்
வேகவைத்த சாதம் - 2 கிண்ணம் தயிர் - 2 கிண்ணம் பால் - 1/4 கிண்ணம் உப்பு - தேவையான அளவு விதையில்லத திரட்சை - 15 முந்திரி பருப்பு - 10 கடுகு - 1 டேபிள் ஸ்பூன் பெருங்காயம் - ஒரு சிட்டிகை கருவேப்பிலை - தேவையான அளவு நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் காரட் (துருவியது) - 1/8 கிண்ணம் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
வாணலியில் எண்ணெய்யை ஊற்றவும். நன்றாக காய்ந்தவுடன் அதில் கடுகை போட்டு வெடிக்கவிடவும். கடுகு வெடித்தவுடன் அதில் மிளகாய், இஞ்சி, பெருங்காயம், கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.
வேகவைத்த சாதத்துடன் பால், தயிர் ஆகியவற்றை கலக்கவும். உப்பு சேர்த்து நன்றாக சாதத்தை கலக்கவும். வறுத்துவைத்த கடுகு மற்றும் பொருட்களை அதில் சேர்த்து கலக்கவும். திராட்சை, காரட் ஆகியவற்றை அதனுடன் நன்றாக கலக்கவும்.
இப்போது தயிர் சாதம் ரெடி.
குறிப்பு: வெள்ளரிக்காய், மாதுளம் பழம் ஆகியவற்றையும் தயிர்சாதத்தில் சேர்த்து கொள்ளலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |