மாட்டு பொங்கலுக்கு செய்ய வேண்டியவைகள் (கணு)
புளியோதரை (புளிசாதம்)

தேவையான பொருட்கள்

கெட்டியாக கரைத்த புளி - 2 கிண்ணம்
காய்ந்த மிளகாய் - 12
சென்னகடலை - 1/8 கிண்ணம்
வேர்கடலை - 1/8 கிண்ணம்
கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை - போதிய அளவு
எள் எண்ணெய் - 1/3 கிண்ணம்
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
வெந்தியம் - 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் மிளகு, சீரகம், வெந்தியம், தனியா ஆகியவற்றை நன்றாக வாசனை வரும் வரை எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் வைத்து , எண்ணெய் காய்ந்தவுடன் சிகப்பு மிளகாய், கடுகு ஆகியவற்றை போடவும். கடுகு வெடித்தவுடன் அதில் கடலை பருப்பு, சென்னா, வேர்கடலை ஆகியவற்றை போட்டு அவை வெடிக்கும் வரை வறுக்கவும். பிறகு அதில் மஞ்சள்தூள், பெருங்காயம்,கருவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும். கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீரை உப்பு சேர்த்து மேற்கூறியவற்றில் கலந்து, எண்ணெய் தனியாக வரும் வரை கொதிக்க விடவும்.

வறுத்து பொடி செய்து வைத்திருக்கும் பொடியை அதில் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைக்கவும். இப்போது புளிகாய்ச்சல் ரெடி.

வேகவைத்த சாதத்தை ஒரு அகண்ட பாத்திரத்தித்தில் கொட்டவும். தேவையான அளவு புளிகாய்ச்சலை எடுத்து சாதத்துடன் கலக்கவும். உங்களுக்கு தேவை என்றால் அதனுடன் சிறிது நல்லெண்ணெய் விடவும். இது ஊற ஊறதான் சுவை.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com