தேவையான பொருட்கள்
காய்கறிகள் வாழைக்காய் - 1 வெள்ளை பூசணிக்காய் - சிறிய துண்டு உருளைக்கிழங்கு - 1 காரட் - 1 சர்க்கரைவள்ளிகிழங்கு - 1 சேனைகிழங்கு - சிறிய துண்டு சேப்பங்கிழங்கு - 4 (மேற்கூறிய எல்லா காய்கறிகளின் தோல்களை நீக்கிவிட்டு நன்றாக வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.)
பீன்ஸ் - 10 பச்சை மிளகாய் - 5 மொச்சை பருப்பு - கைப்பிடி அளவு (காய்ந்த பருப்பாக இருந்தால் முதல்நாள் இரவே ஊற வைக்கவேண்டும்) அவரைக்காய் - 10 இந்த காய்கறிகள் எல்லாவற்றையும் தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
துவரம்பருப்பு - 2 கிண்ணம் (நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்) புளி கரைச்சல் - 3 கிண்ணம் உப்பு - தேவையான அளவு பெருங்காயம் - 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/ 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி, கருவேப்பிலை - தேவையான அளவு
இனி சாம்பார் பொடி செய்முறை
சிகப்பு மிளகாய் - 10 தனியா - 2 டேபிள் ஸ்பூன் கடலைபருப்பு - 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் வெந்தியம் - 1 டேபிள் ஸ்பூன்
மேற்கூறிய பொருட்களை நன்றாக எண்ணெய்யில் பொன்நிறம் வரும் வரை வதக்கி எடுத்து மிக்ஸியில் தூள் செய்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை
கரைத்த புளி தண்ணீரை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றவும். இதனுடன் மஞ்சள் தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். புளி தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் (நன்றாக கொதித்தால்தான் புளி வாசனை போகும்) வேக வைத்த காய்கறிகளை அதில் போட்டு மேலும் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். அதன் பிறகு கொதிக்கும் குழம்பில் தாயராக உள்ள சாம்பார் பொடியையும், பெருங்காயத்தையும் போட்டு கொதிக்கவிடவும். கடைசியில் வேகவைத்த பருப்பை அதில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன் அதில் கடுகு, பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து சேர்க்கவும். கடைசியில் இறக்கி வைக்கும் முன் அதில் கருவேப்பிலை, பச்சை கொத்தமல்லி ஆகியவற்றை போட்டு இறக்கி வைக்கவும்.
இப்போது குழம்பு ரெடி.
சரஸ்வதி தியாகராஜன் |