தேவையான பொருட்கள்
அரிசி - 1 1/2 கிண்ணம் பாசி பருப்பு - 1/2 கிண்ணம் தண்ணீர் - 5 கிண்ணம் மஞ்சத்தூள் - 1/4 டேபிள் ஸ்பூன் கருவேப்பிலை - தேவையான அளவு நெய் - 3 டேபிள் ஸ்பூன் மிளகு - 1 டேபிள் ஸ்பூன் முந்திரி - 12 சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி துண்டு - 1 உப்பு - தேவையான அளவு
செய்முறை
அரிசியையும், பாசிபருப்பையும் தனித்தனியாக நன்றாக கடாயில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அரிசியையும், பாசிபருப்பையும் 5 கப் தண்ணீர் விட்டு பிரஸர் குக்கரில் வேகவைக்கவும். முதல் விசில் சத்தம் வந்தவுடன் அடுப்பை கொஞ்சம் சிறியதாக வைத்து மேலும் 5 நிமிடங்களுக்கு வேகவைக்கவும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி, சிறிது நேரம் கழித்து வெந்த அரிசியையும், பருப்பையும் கரண்டியால் நன்றாக மசித்து கொள்ளவும்.
மிளகு, சீரகம் இரண்டையும் பொடி செய்து கொள்ளவும். நெய்யை சூடாக்கி அதில் பொடி செய்த மிளகு, சீரகத்தையும், முந்திரி பருப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும். உடன் இஞ்சி, கருவேப்பிலை ஆகியவற்றையும் போடவும். பிறகு மேற்கூறியவற்றை வேகவைத்த சாதத்தில் போட்டு நன்றாக கலக்கவும். தேவையெனில் சிறிது நெய்யை விடவும்.
சுடாக சாப்பிடுவதற்கு வெண்பொங்கல் நன்றாக இருக்கும்.
சரஸ்வதி தியாகராஜன் |