தேவையான பொருட்கள் கடலை பருப்பு - 1 கிண்ணம் துவரம் பருப்பு - 1/2 கிண்ணம் ஊளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் சிகப்பு அல்லது பச்சை மிளகாய் - 8 உப்பு - தேவைக்கேற்ப பெருங்காயம் - ஒரு சிட்டிகை கருவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
பருப்புகள் எல்லாவற்றையும் ஒன்றாக தண்ணீர் விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு பருப்புகளை நன்றாக களைந்து கொள்ளவும். தண்ணீரை வடிகட்டவும். பருப்புகளுடன் மிளகாய், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் ஒன்றும் இரண்டுமாக அரைத்து கொள்ளவும். அதன் பிறகு அரைத்த பருப்பில் கருவேப்பிலையை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு ஒவ்வொரு உருண்டையாக எடுத்துக் கொண்டு அதை ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து சின்ன சின்னதாக தட்டிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய்யைவிட்டு அது நன்றாக காய்ந்தவுடன் அதில் போட்டு நன்றாக வேகவிடவும். நன்றாக சிவந்து வந்தவுடன் வடையை எண்ணெயிலிருந்து எடுத்து விடவும். ஆமைவடை சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும்.
சரஸ்வதி தியாகராஜன் |