அமெரிக்க இயந்திரபேய் 'முனிஸ்வரா' படத்திற்காக
'முனிஸ்வரா' படத்தில் முனிஸ்வரா என்ற கேரக்டருக்காக அமெரிக்காவிலிருந்து இயந்திரபேய் உருவாக்கப்பட்டு படப்பிடிப்பு ஒக்கேனக்கலில் நடந்து வருகிறது. இந்த இயந்திரப் பேயை இயக்குவதற்காக அமெரிக்காவிலிருந்து கிறிஸ்டோபர் டேவிட் என்பவர் இந்தியா வந்திருக்கிறார்

முனீஸ்வரா என்ற படத்தில் நடிகர் அருண்பாண்டியனின் சகோதரர் துரை பாண்டியன் சிறப்பு கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். இவர் ஏற்கனவே ஊழியன் என்ற படத்தை இயக்கியவர்.

'கடவுள்' கண்ணன் என்பவர்தான் முனீஸ்வரா படத்தின் இயக்குனர். இவர் ஆர்.கே. செல்வமணி, வேலுபிரபாகரன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அதுமட்டுமில்லாமல் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் உட்பட 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

சந்துரு

© TamilOnline.com