புதுமையான 'முராரி'
தெலுங்கில் இவ்வருட துவக்கத்தில் வெளியாகி வசூல் ரீதியாக சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் 'முராரி'. காரணம் எத்தனையோ போதிலும் 18வயது அறிமுக நாயகனாக மகேஷ், இவர் பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மகன். நாயகியாக சோனாலிபிந்த்ரே. சாதாரணமான கூட்டுக் குடும்ப வாழ்க்கை, தெய்வகுற்றம் செய்த தால் 48 வருடங்களுக்கு ஒருமுறை குடும்பத் தில் ஒருவர் பலியாவார். அது படத்தின் நாயகன் என்பது ஹைலைட்டான விஷயம்.

படத்தின் முதல் 15 நிமிடத்தில் இது தெரிந்துவிடும். படம் பார்ப்பவர்களுக்கு பரபரப்பு என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் படத்தை பார்க்கும் ஆர்வத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத் தும் வண்ணம் படத்தின் திரைக் கதையைஅமைத்திருந்தார் இயக்குநர் கிருஷ்ணவம்சி.

சந்துரு

© TamilOnline.com