Dialog
ஆபிசில்

என்ன சுரேஷ்! ஆபிசில என்னமோ வேலையில்லங்கற. போரடிக்காம இருக்க என்ன செய்யப்போற.

வார் நடக்குதில்ல! பேசாம, குண்டு போட்டு வரலாமான்னு பார்க்குறேன்!!

*****


1 : என்ன மச்சி! ஆபிசில வேலை எப்படியிருக்கு?

2 : போயிண்டிருக்கு

1 : ????!!!!!

*****


நண்பர் வீட்டு விருந்தில், நாலு வயது பெண் குழந்தையின் தந்தையிடம்:

என்னங்க, உங்க பொண்ணு ரொம்ப நல்லா தமிழ்ல பேசறாளே! எப்படி.?

பெண்ணின் தந்தை: எங்களுக்கு இங்கிலிஷ்ல அவ்வளவா பேச வராதுங்க. அதான்.

*****


பிரீமாண்ட் காய்கறி மார்க்கெட்டில்

என்ன சிவா. எப்போதும் காய்கறி வாங்கறச்சே சும்மா அப்படியே பொறுக்கிண்டு போவ?. இன்னிக்கு பிஞ்சு, முத்தல்னு பார்த்து, பொறுக்கறே!

டேய், போட்டு கொடுக்காதடா, பொண்டாட்டி பக்கத்துலதான் இருக்க'.

*****


சாரதா மாமியின் வீட்டில்:

வீட்டுக்கு வந்தவர்: என்ன சாரதா உங்க வீட்டு வாசல்ல, திருஷ்டி கழிக்க, போட்டோ எதாவது மாட்டறது தானே?

சாரதாவின் மகன்: அம்மா மாமியோட, போட்டோ இருந்தா கேளும்மா.

ஸ்ரீகோண்டு

© TamilOnline.com