வளைகுடாவில் ஒய்.ஜீ. மகேந்திரனின் இரட்டை மகிழ்ச்சி
ஜுலை மாதம் 16ம் தேதி மாலை 3.30 மணிக்கு சான்ஹோசே சி.இ.டி அரங்கில் ஒய்.ஜி. மகேந்திரனின் இரண்டு நாடகங்கள் தொடர்ந்து நடை பெற்றன. விபா என்கிற தான்னார்வ அமைப்பின் நிதி திரட்டும் பணிக்காக, வளைகுடா தமிழ் மன்றத்தின் ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்ட இந் நிகழ்ச்சி, ஆல்டாஸ் நிறுவனத்தின் பிரத்தியேக ரா·பிள் பரிசு, மனதிற்கினிய பாடல்கள், நிறைவான சாப்பாடு என கண், செவி, வயிறு இவற்றிற்கு நிறைவான ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது.

·ப்ரீமாண்ட் நகர கவுன்சிலர் அனு நடராஜன் தலைமை தாங்கிய இந் நிகழ்ச்சிக்கு, வளைகுடா அன்பர்கள் பெருமளவில் வந்து, ஆர்வத்துடன் பங்கேற்று பேராதரவு தந்தனர்.

முதலாவதாக வந்த தந்திரமுகி முற்றிலும் புதிய படைப்பு. பெயரிலே, சூப்பர் ஸ்டார் ரஜினியின் சந்திரமுகியை நினைவுபடுத்து வதால், அப்படத்தின் நகைச்சுவையின் மறுபிறப்போ என்று நினைத்துத் தான் நான் நாடகம் பார்க்கச் சென்றேன். ஆனால், ஏடுத்த உடனேயே, ‘இரண்டு படைப்புகளுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை முன் ஜன்மம் பற்றிய சிந்தனை தான்ஒ என்று தலப்புக்கு விளக்கம் கூறி சிந்தனைக் குதிரைகளை வேறு வழிக்கு திசை திருப்பி நாடகத்தை ஆரம்பித்தார் ஒய்.ஜி.

ஒரு இளைஞன் காதல் கடிதம் கொடுக்கச் சென்ற இடத்தில் - ஒரு பரீட்சைக்கு ஆளாக்கப் படுகிறான். அவனுக்கு உதவி செய்ய முன் வருகிறார் ‘solution சுந்தரஒமாகிய ஒய்.ஜி. ‘solution சுந்தரஒ த்திற்கு உதவி செய்பவர் ஒரு சித்தர். சென்ற காலத்தையும், வருங்காலத்தையும் தன் ஞான திருஷ்டி யாலும், ஓலைச் சுவடியாலும் பார்த்துச் சொல்லக் கூடிய சித்தருக்கு ஒரே ஒரு பிரச்சனைதான். கிழமைகள் மட்டும் அவருக்கு சரிவரத் தெரியாது. பரீட்சையில் அவரிடம் கிழமை பற்றிக் கேட்கப் போக, அவன் காதல் நிராகரிக்கப் படுகிறது. இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட, சித்தர் கூறும் வழி, முன் ஜன்மத்தில் அவனால் சாகடிக்கப் பட்ட ஒரு பெண் பத்மா என்ற பெயரில் பிறந்திருப்பதாகவும் அவளுக்குத் தாலி கட்டினால் தான் சாபம் தீரும். மீதி கதை நாடகம் பார்த்தவர்களுக்குத் தெரியும். அதன் பிறகு ஒரே கலாட்டாவோ கலாட்டா தான்.

சித்தராகவும், வெட்டியானாகவும் வந்தவர், இரட்டை வேடத்தில் வந்து ஒரே கலக்கல் தான். நாடகத்தில் கதாநாயகியாக வந்தவர், கோலங்கள் தொடரில் வருகின்ற அண்ணி. சிரித்த முகத்துடன் நல்ல உற்சாகம் தரும் நடிகையாக இவர் இருந்தார். நாடகத்தின் இறுதியில் வந்த பார்த்தசாரதி கோவில் பத்மா என்ற யானை நல்ல முறையில் வடிவமைக்கப் பட்டு இருந்தது. அது நடந்து வந்து தலையை ஆட்டிக் கொண்டு தும்பிக்கையை வளைத்தது, நிஜ யானையைப் பார்த்த திருப்தி ஏற்படுத்தியது.

முதல் நாடகம் முடிந்து, இரண்டாம் நாடகம் ஆரம்பிக்கும் முன், திரு.பிரபு அவர்கள் இரண்டு பாடல்கள் பாடினார். திரு சிவாஜிக்குப் பிரியமான, ‘தூங்காத கண்ணொன்று உண்டுஒ என்ற பாடலைப் பாடியதும், அரங்கம் நடிகர் திலகத்தின் நினைவில் உருகியது.

இரண்டாவது நாடகமாகிய ஓகாதலிக்க நேரமுண்டுஔ வழக்கமான கதைதான். இரண்டு கட்டை பிரும்மச்சாரிகள், பக்கத்து வீட்டில் இருக்கும் இரண்டு பெண்களை வளைக்கப் பார்க்கிறார்கள். இந்தக் கதைக்கு நடுவே, மசால் வடை என்று கேட்டாலே மயக்கம் வரும் குழப்பம், திடீரென்று காட்சி தரும் செட்டப் மலையாள மகாவிஷ்ணு, திருமண நாள் அன்று திரும்பி வந்து கதையைத் திருப்பும் பழைய காதலன் என்று பல்வேறு நாடக உத்திகளை வாரி இறைத்திருக்கிறார்கள். வயதான காதலியாக நடித்தவரின் நடை இருக்கிறதே... நாடகத்தைப் பார்த்தவர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

சினிமாப் பாடல்களிலிருந்து வெட்டி எடுக்கப் பட்ட இசை, பல சிரிக்க வைக்கும் உத்திகள் செந்தில், நாகேஷ், என். எஸ். கிருஷ்ணன் அவர்களின் உபயம், வழக்கமான துணுக்குத் தோரணமான வசனங்கள் என்று இருந்தாலும், நாடக மேடையில் 45 வருடங்களைத் தொட்டுவிட்ட அனுபவம், மற்றும் இயக்கததில் மிகுந்த திறமை போன்றவற்றைப் பார்க்க முடிந்தது.

இந்நிகழ்ச்சியை, நண்பர்கள் குழுவான உமா, வெங்கட், ஸ்ரீராம், ஹரி, கிருஷ்ணா, சதீஷ், வேணு அவர்கள் மிகத் திறமையாக ஏற்பாடு செய்திருந்தனர். விபா அமைப்பின் தன்னார்வப் பணியாளர்களும் மிகவும் திறமையாகச் செயல்பட்டனர். நல்ல இரண்டு நாடகங் களையும், இனிமையான மாலைப் பொழுதையும் அனுபவித்த திருப்தி ஏற்பட்டது.

பாகிரதி சேஷப்பன்

© TamilOnline.com