தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கிண்ணம் மைதா மாவு - 1 கிண்ணம் முட்டை (சிறிது உப்பு) - 1 பச்சை பால் (மாவில் கலப்பதற்கு) - 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் (அ) நெய் - 2 டேபிள் ஸ்பூன் சமையல் சோடா - 1 டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
செய்முறை
முதலில் மைதா மாவு, சமையல் சோடா இரண்டையும் ஒன்றாக கலந்து அதனுடன் நெய் அல்லது வெண்ணெய், பால் ஆகியவற்றை சேர்த்து மிருதுவாக கலந்து கொள்ளவும்.
பிறகு மாவை ஒரே அளவாக பிரித்து பந்து போல் உருண்டையாக உருட்டி கொள்ளவும்.
ஒவ்வொரு உருண்டையும் சப்பாத்தி வடிவத்தில் செய்து கொள்ளவும்.
சப்பாத்தியின் மேல்பரப்பில் சிறிது நெய்யை விட்டு தடவி, பிறகு பாதியாக மடிக்கவும்.
இப்போது மறுபடியும் மாவை பாதியாக மடித்து, இரண்டு முனைகளையும் சேர்த்து முக்கோண வடிவ தோற்றம் வரும்படி அழுத்தவும்.
பிறகு ஒவ்வொரு பரோட்டாவின் மேல் முட்டை கலவையை தடவி எண்ணெய்யில் பொரிக்கவும்.
மொகல் பரோட்டா ரெடி. இது சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.
சரஸ்வதி தியாகராஜன் |