தேவையான பொருட்கள்
சுண்டைக்காய் வற்றல் - 1 கரண்டி நெல்லிமுள்ளி - 1/2 கரண்டி தேங்காய் தூள் - 1/2 கரண்டி உப்பு - சிறிதளவு மோர்மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 2 சீரகம் - 2 ஸ்பூன் கெட்டிதயிர் - 1/2 ஆழாக்கு தாளிக்க எண்ணெய் - 1 கரண்டி பெருங்காயம் கரைத்த நீர் - சிறிதளவு பச்சை கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
நெல்லிமுள்ளியை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, சீரகம் இவற்றுடன் ஊறிய நெல்லிமுள்ளியை மிக்ஸியில் அரைக்கவும்.
அரைத்த விழுதை தயிரில் கலக்கவும்.
சுண்டைக்காய் வற்றல், மோர்மிளகாய் இவற்றை எண்ணெய்யில் வறுக்கவும்.
மோர்மிளகாயை லேசாக உதிர்த்து தயிரில் போடவும்.
சுண்டைக்காய் வற்றலை வறுத்தபடி சூட்டுடன் தயிரில் போடவும்.
பெருங்காயம் கரைத்த நீர்விட்டு பச்சை கொத்தமல்லியை போடவும்.
மிகவும் வித்தியாசமான சுவையுள்ள மருத்துவ குணமுள்ள தயிர்பச்சடி ரெடி.
இந்திரா காசிநாதன் |