சுண்டைக்காய் வற்றல் மோர்க்குழம்பு
தேவையான பொருட்கள்

சுமாராக புளித்த மோர் - 1 டம்ளர்
வற்றல் மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
சுண்டைக்காய் வற்றல் - 1 பிடி
அரிசி, கடலைபருப்பு, துவரம் பருப்பு, - ஒவ்வொன்றும்
வெந்தயம், தனியா, - தனித்தனியாக 1
சீரகம் - ஸ்பூன்
தேங்காய் தூள் - 1 கரண்டி
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
பச்சை கொத்தமல்லி - 1 ஸ்பூன்
சுண்டைக்காய் வற்றல் - 4 ஸ்பூன்
இஞ்சி - 2 அங்குல நீளம்

செய்முறை

பருப்பு வகைகள், அரிசி, வெந்தயம், தனியா, சீரகம் இவற்றை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். இவற்றுடன் தேங்காய்தூள், இஞ்சி, பச்சைமிளகாய், வற்றல் மிளகாய் இவற்றையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.

அரைத்த விழுதை மோரில் கலந்து தேவையான உப்பு போட்டு (சுண்டைக்காய் வற்றலில் உப்பு இருப்பால் உப்பு குறைவாக போடவும்) அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு சுண்டைக்காய் வற்றலை பொரித்து கடுகு தாளித்து கொதிக்கும் மோர்குழம்பில் போடவும். 2, 3 நிமிடங்கள் போதுமானது. குழம்பு பொங்கி வரும் போது கீழே இறக்கவும்.

கொத்தமல்லி போட்டு தேங்காய் எண்ணெய் விட்டு மூடி வைக்கவும்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com