தேவையான பொருட்கள்
பச்சை சுண்டைக்காய் - 1 ஆழாக்கு பயத்தம் பருப்பு - 1/4 ஆழாக்கு தேங்காய் துருவல் - 1/4 ஆழாக்கு மிளகு - 2 ஸ்பூன் மிளகாய் வற்றல் - 1 சீரகம் - 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன் பெருங்காயம் - கரைத்த நீர் சிறிதளவு உப்பு - தேவையான அளவு கருவேப்பிலை - சிறிதளவு கடுகு - 1 ஸ்பூன் எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை
சுண்டைக்காயை நன்கு அலம்பி காம்பு ஆய்ந்து சப்பாத்தி குழவியால் நசுக்கவும். பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் விட்டு நசுகிய சுண்டைக்காயுடன் உப்பு, சீரகம்,பெருங்காய நீர் இவற்றை போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, உளுத்தம்பருப்பு இவற்றை பொன்னிறத்தில் வறுத்து தேங்காய் துருவலுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். குக்கரில் வெந்த பயத்தம் பருப்புடன் அரைத்த விழுதைசேர்த்து வெந்து கொண்டிருக்கும் சுண்டைக்காயில் விட்டு கலந்து சிறிது கொதித்ததும் கீழே இறக்கி வைக்கவும். கடுகு, சீரகம், தாளித்து கருவேப்பிலை போடவும்.
இந்திரா காசிநாதன் |