தபஸ்யா
பாரதி கலாலயா என்ற நுண்கலை அமைப்பு இந்திய இசைநாட்டியத்திற்காகவே ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பு பண்டைய இந்திய கலைகளை, தங்கள் மாணவர்களுக்கு பாடங்களாக அமைத்து அக்கலை களை உயிர்ப்பிக்கிறது.

நம்முடைய பாரம்பரிய கலைகளை நாளைய சமுதாயத்திற்கு அளிப்பதே இவர்களுடைய லட்சியம். இங்குள்ள திறமையான ஆசிரியர்களின் உதவியுடன் இப்பணியை செய்கிறார்கள்.

பாரதி கலாலயா நவம்பர் 1997ல் அனுராதா சுரேஷ் என்பவரால் தொடங்கப்பட்டது. தற்போது இதில் 180 மாணவர்கள் பல்வேறு கலைகளை கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வருடம் 'தபஸ்யா' என்ற ஒரு பொது நிகழ்ச்சியை அரங்கேற்ற இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சி பாரதிகலாலயாவின் ஆசிரியர்களில் ஒருவரான திருமதி வித்யா வெங்கடேசனால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் பாரதிகலாலயாவில் நாட்டியம் பயிலும் மாணவர்கள் பங்கேற்கிறார்கள். இதைத் தொடர்ந்து கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெறும். இதையும் கலாலயாவின் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து வழங்குகிறார்கள். இந்நிகழ்ச்சியை டாக்டர் பத்மாராஜகோபால் நடத்துகிறார்.

இதைத் தொடர்ந்து பாரதியகலாலயாவின் மாணவர்களும், பண்டிட் ஹபீப்கான் இசைப் பள்ளியின் மாணவர்களும் இணைந்து இந்துஸ்தானி இசையை வழங்குகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை வடிவமைத்து வழங்குபவர் பாரதிய கலாலயாவின் பண்டிட் ஹபீக்கான். ஹார்பான் என்ற கீபோர்ட் நிகழ்ச்சியை பிரவீண் சத்தா அவர்கள் வடிவமைத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியை பாரதிகலாலயவின் கீ போர்ட் மாணவர்கள் நிகழ்த்த இருக்கிறார்கள்.

இந்த கலை நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பு வைப்பது போல் ஒரு சித்தார் நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது. இதை வழங்குபவர் பண்டிட் ஹபீப்கான். பண்டிட் செப்பன் செளத்ரி தபாலா வாசிக்கிறார்.

தேதி : சனி மார்ச்9, 2002
இடம் : ஸான்டா கிளாரா கன்வென்ஷன் சென்டர்
நேரம் : மாலை 7 மணி
டிக்கெட்டுகள் : ராகாமியூசிகல், மெயில் பேக், பாரதி கலாலயா

© TamilOnline.com